சாலையோரம் வரிசையாக வைக்கப்பட்டுள்ள கழிவு நிரப்பிய பைகளால் விபத்து அபாயம்

தாம்பரம், தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையோரத்தில், வரிசையாக வைக்கப்பட்டுள்ள, கழிவு நிரப்பப்பட்ட பைகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கிண்டி முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், இருபுறமும் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும், சாலையில் தேங்கும் மழைநீர் வடிவதற்கு முறையான கட்டமைப்புகள் இல்லாததால், பல நாட்கள் தேங்கி நிற்கும் மழை நீரால், வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
அதனால், சாலையில் தேங்கும் மழைநீர் உடனுக்குடன் வெளியேறும் வகையில், மழைநீர் கால்வாயை ஒட்டி, தொடர்ச்சியாக நீர் உள்வாங்கிகள் கட்டப்பட்டுள்ளன. மழை காலத்தில் தேங்கும் தண்ணீர், இந்த உள்வாங்கிகள் வழியாக கால்வாய்க்கு செல்லும்.
இந்நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த உள்வாங்கிகளை துார்வாரும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், துார்வாரப்படும் கழிவை உடனுக்குடன் அகற்றாமல், பைகளில் கொட்டி, நீர் உள்வாங்கிகளை ஒட்டி தாம்பரம் முதல் இரும்புலியூர் வரை, ஜி.எஸ்.டி., சாலையோரம் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால், அதிக மழை பெய்யும் போது, கழிவு கரைந்து மீண்டும் உள்வாங்கிகளில் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், சாலையோரம் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள பைகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்தும் உள்ளது.
அதனால், நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு, ஜி.எஸ்.டி., சாலை யோரம் வரிசையாக வைக்கப்பட்டுள்ள கழிவு நிரப்பப்பட்ட பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
அவசர கால நிவாரணங்களை விரைந்து அறிவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சைமா வலியுறுத்தல்
-
செப்டம்பர், 2 வரை மழை பெய்யும்
-
விநாயகர் சிலைகள் குளங்களில் விசர்ஜனம்
-
அமெரிக்காவுக்கு பெரிய கும்பிடு போடுகிறார் மோடி! முக்கியமான 40 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடு
-
அகில இந்திய கூடைப்பந்து: இந்தியன் வங்கி அணி வெற்றி
-
தனியார் பஸ்சில் அரை டிக்கெட் இல்லை