ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு துவங்கியது; பிரதமரை வரவேற்றார் சீன அதிபர்

தியான்ஜென்: சீனாவின் தியான்ஜென் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு துவங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஜி ஜின்பிங் வரவேற்றார்.
ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, 7 ஆண்டுகளுக்கு பின் நேற்று சீனா சென்றார். 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன படைகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதை அடுத்து, இருநாட்டு உறவும் பாதிக்கப்பட்டது. அதேவேளையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு மத்தியில் பிரதமர் மோடியின் இந்த சீன பயணம் உலக நாடுகளை உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளது.
இந்த சூழலில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வருமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்தியா மற்றும் சீனா பரஸ்பர வளர்ச்சி நட்பு நாடுகளே தவிர, போட்டியாளர்கள் அல்ல என்பதை இரு நாட்டு தலைவர்களும் உறுதிபடுத்தினர். இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது என்பதை தீர்மானித்துள்ளனர், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சீனாவின் தியான்ஜென் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு துவங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஜி ஜின்பிங் வரவேற்றார். பின்னர், ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க வந்த தலைவர்கள் ஒன்றாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர்.
அமெரிக்க வரிவிதிப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் ஒரே இடத்தில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது, அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.


மேலும்
-
'லிப்ட்' கேட்டு பைக்கில் சென்ற மூதாட்டி தவறி விழுந்து பலி
-
நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த விவசாயி கைது
-
பட்டாசு ஆலைகளை அனுமதிக்க கூடாது எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்
-
டெல்டாவில் 50 சதவீதத்துக்கு மேல் நிரம்பி வழியும் 737 ஏரி, குளங்கள்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு; ஒரு சவரன் ரூ.78,440!
-
பா.ஜ.,வுக்கு அதிகாரம் தான் முக்கியம்: அமைச்சர் கோபம் பா.ஜ.,வுக்கு அதிகாரம் தான் முக்கியம்: அமைச்சர் சுதாகர் கோபம்