ஹிமாச்சல் பிரதேசத்தை புரட்டி போட்ட பருவமழை: 320 பேர் பலி, 822 சாலைகள் மூடல்

சிம்லா: ஹிமாச்சல் பிரதேசத்தில் பருவமழை சீற்றத்துக்கு 320 பேர் பலியாகி உள்ளனர். 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 822 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அம்மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஹிமாச்சல் பிரதேசத்தில் முன் எப்போதும் இல்லாத கனமழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்துடன் நிலச்சரிவும் அம்மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. ரவி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு, பல கிராமங்களை இணைக்கும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
ஹிமாச்சல் பிரதேசம் பருவமழையால் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை அம்மாநில பேரிடர் ஆணையம் சில விவரங்களுடன் வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது;
பருவமழையின் சீற்றம் மாநிலத்தின் உள்கட்டமைப்பை கடுமையாக பாதித்துள்ளது. 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 822 சாலைகள் முற்றிலும் மூடப்பட்டு உள்ளன. 1236 மின்மாற்றிகள், 424 நீர் வழங்கல் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 20 முதல் தற்போது வரை பருவமழைக்கு மாநிலத்தில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 320ஐ எட்டி உள்ளது. நிலச்சரிவுகள், திடீர் வெள்ளத்தில் சிக்கி 166 பேர் உயிரிழந்துள்ளனர். 154 பேர் சாலை விபத்துகளில் பலியாகி உள்ளனர்.
100க்கும் மேற்பட்ட கிராம இணைப்புச் சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ஹிமாச்சல் பிரதேச மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.


மேலும்
-
'லிப்ட்' கேட்டு பைக்கில் சென்ற மூதாட்டி தவறி விழுந்து பலி
-
நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த விவசாயி கைது
-
பட்டாசு ஆலைகளை அனுமதிக்க கூடாது எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்
-
டெல்டாவில் 50 சதவீதத்துக்கு மேல் நிரம்பி வழியும் 737 ஏரி, குளங்கள்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு; ஒரு சவரன் ரூ.78,440!
-
பா.ஜ.,வுக்கு அதிகாரம் தான் முக்கியம்: அமைச்சர் கோபம் பா.ஜ.,வுக்கு அதிகாரம் தான் முக்கியம்: அமைச்சர் சுதாகர் கோபம்