நீரில் மூழ்கியவர்களை காப்பாற்ற தீயணைப்புத்துறை செயல்விளக்கம்
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரியில், தீயணைப்பு துறையினர், பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். பருவ மழை தொடங்கி விட்டதால், தர்மபுரி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அம்பிகா உத்தரவின் படி, பாதுகா
ப்பு ஏற்பாடுகள் குறித்த நடவடிக்கை மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.பாப்பிரெட்டிப்பட்டி நிலைய அலுவலர் (பொறுப்பு) பிரகாசம் தலைமையில், தீயணைப்பு துறையினர், நேற்று பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரியில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். இதில் நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது, தண்ணீரில் தத்தளிப்பவர்களை மீட்பது, அவர்களை கரைக்கு கொண்டு வந்து முதலுதவி அளித்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்வது, நீரில் மூழ்கியவர்களை, படகை பயன்படுத்தியும், டியூப் அணிந்து சென்று தேடுவது போன்றும், தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் செய்து காட்டினர்.
மேலும்
-
முற்றுகை போராட்டம்
-
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
-
விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து குரல் கொடுப்போம்: பழனிசாமி
-
தங்கம் கடத்திய நடிகை ரன்யா ராவ் உட்பட 4 பேருக்கு... ரூ.270 கோடி அபராதம்! வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி
-
கொலை முயற்சி வழக்கு நிரூபணம் மகளை கொன்று தாய் தற்கொலை
-
அடிப்படை வசதி நிறைவேற்றக்கோரி முற்றுகை: இந்திய கம்யூ., முடிவு