கூட்டுறவு நகர வங்கி பேரவை கூட்டம்

தர்மபுரி, தர்மபுரி கூட்டுறவு நகர வங்கியின் பேரவை கூட்டம் தலைமை அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. வங்கியின் செயலாட்சியர் பிரேம் தலைமை தாங்கி, வங்கியின் வளர்ச்சி மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். வங்கியின் பொதுமேலாளர் பழனிசாமி வரவேற்றார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன் கலந்து கொண்டார்.

வங்கியின், 3 ஆண்டுகளின் வரவு செலவுகள் அங்கீகரித்தல், வங்கியின் தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகத்தில் நவீன, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்துவது உட்பட, 10 பொருட்கள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது.

உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, வங்கியின், 'அ' வகுப்பு உறுப்பினர்களுக்கு, 10 சதவீத பங்கு ஈவுத்தொகை வழங்குவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், வங்கி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் வங்கியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலாளர் பவித்ரா நன்றி கூறினார்.

Advertisement