நிலத்தடி குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மடம் தெருவில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
காஞ்சிபுரத்தில் 1,060 தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல் மற்றும் வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் மூலம், மாநகராட்சி சார்பில், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மடம் தெருவில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
முற்றுகை போராட்டம்
-
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
-
விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து குரல் கொடுப்போம்: பழனிசாமி
-
தங்கம் கடத்திய நடிகை ரன்யா ராவ் உட்பட 4 பேருக்கு... ரூ.270 கோடி அபராதம்! வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி
-
கொலை முயற்சி வழக்கு நிரூபணம் மகளை கொன்று தாய் தற்கொலை
-
அடிப்படை வசதி நிறைவேற்றக்கோரி முற்றுகை: இந்திய கம்யூ., முடிவு