சூதாடிய 8 பேர் கைது



ப.வேலுார், ப.வேலுார் அருகே, வெங்கரை டவுன் பஞ்., குப்பை கிடங்கு அருகே சூதாட்டம் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., சீனிவாசன் தலைமையில் போலீசார், சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று கண்காணித்தனர்.


அப்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை பிடித்து சுற்றி வளைத்தனர். விசாரணையில், வெங்கரையை சேர்ந்த சசிகுமார், 20, தணிகைவேல், 23, விக்னேஷ், 24, கருப்பையா, 37, கொளக்காட்டுப்புதுார் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம், 39, சுரேஷ், 35, பூசாரிபாளையம் பகுதியை சேர்ந்த ஜீவன், 25, கள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார், 35, என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.

Advertisement