மீண்டும் தள்ளி போகிறது குத்தம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பு

திருமழிசை:திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் திறப்பு, மீண்டும் தள்ளிப்போகிறது.
திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என, 2019ல் தமிழக அரசு அறிவித்தது. இதற்காக குத்தம்பாக்கம் கிராமத்தில், வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து, 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டு, ஐந்து லட்சம் சதுர அடியில் 427 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி, 2021ல் துவக்கப்பட்டது.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு செல்லும், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
குத்தம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமான பணிகள், முடிக்கப்பட்டு, 2024 டிச., இறுதிக்குள் பேருந்து நிலையம் திறக்கப்படும் என, முதலில் அறிவிக்கப்பட்டது.
கட்டுமான பணிகள் குறித்த காலத்தில் முடி யாதது, கூடுதல் வசதிகள் செய்ய சி.எம்.டி.ஏ., திட்டமிட்டது போன்ற காரணங்களால் திறப்பு விழா தள்ளிப்போ னது. இதன்பின், மார்ச் அல்லது ஏப்., மாதத்தில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போதும் திறக்கப் படவில்லை.
இதை யடுத்து, ஜூலை இறுதிக்குள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போதும் திறக்கவில்லை. இந்நிலையில், ஆக., இறுதிக்குள் திறக்கப்படும் என, கடந்த ஆய்வின் போது அறிவிக்கப்பட்டது.
இதிலும் பணிகள் முடியாததால், நவ., இறுதிக்குள் திறக்கப்படும் என, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
குத்தம் பாக்கம் பேருந்து நிலைய பணிகளை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., தலைவரும், அமைச்சருமான சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் அமைச்சர் சா.மு.நாசர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் கோ.பிரகாஷ், திருவள்ளூர் கலெக்டர் மு. பிரதாப் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஆய்வுக்கு பின் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
இந்த பேருந்து நிலையத்தில், 300 மாநகரப் பேருந்துகள், 600 எஸ்.இ.டிசி., பேருந்துகள், 50 கே.எஸ்.ஆர்.டி.சி., பேருந்துகள், 36 வெளி மாநில பேருந்துகள் என, மொத்தம் 986 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பயணியருக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு, நவ., இறுதிக்குள் இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
@block_B@
70 வெளியூர் பேருந்துகள், 30 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் 36 மாநகர பேருந்துகள், 48 வெளியூர் பேருந்துகள், 27 ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைக்க இடவசதி 1,680 இரு சக்கர வாகனங்கள், 235 கார்கள் நிறுத்தும் வசதி 41 கடைகள், கட்டுப்பாட்டு அறை, மூன்று இடங்களில் நகரும் படிகள் அமைய உள்ளன.block_B
மேலும்
-
பள்ளிகளில் உளவியல் ஆலோசனை பெற்றோர்கள் கோரிக்கை
-
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து டாக்டர் பணியிடம் காலி அதிகாரிகள் கவனிப்பார்களா?
-
ஆக்கிரமிப்பு வேலியை அகற்றிய வருவாய்த்துறை அதிகாரிகள் திருவாலவாய நல்லுாரில் தர்ணா போராட்டம்
-
பழனிசாமியை வரவேற்ற அ.தி.மு.க., நிர்வாகிகள்
-
உயிர்களை காவு வாங்கும் குவாரி குட்டைகள் கண்டும் காணாமலும் அதிகாரிகள்
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்