சேதமடைந்த நிலையில் மாற்றுத்திறனாளி கழிவறை
கரூர், கரூர் அருகே பல மாதங்களாக, மாற்றுத்திறனாளிகளுக்கான, பொது கழிப்பிடம் பராமரிப்பு இல்லாமல்,
சேதமடைந்த நிலையில் உள்ளது.புகழூர் நகராட்சி, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் எதிரே, சில ஆண்டுகளுக்கு முன், மாற்றுத்திறனாளிகளுக்கு என நவீன வசதியுடன் கூடிய புதிதாக கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கழிப்பிடத்தின் உள்பகுதிகளில், சேதம் ஏற்பட்டதால் மாற்றுத்திறனாளிகள் அங்கு செல்வதை தவிர்த்து விட்டனர்.
எனவே, கழிப்பிடத்தை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், பராமரிப்பு செய்து பயன்பாட்டுக்கு விட, புகழூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பள்ளிகளில் உளவியல் ஆலோசனை பெற்றோர்கள் கோரிக்கை
-
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து டாக்டர் பணியிடம் காலி அதிகாரிகள் கவனிப்பார்களா?
-
ஆக்கிரமிப்பு வேலியை அகற்றிய வருவாய்த்துறை அதிகாரிகள் திருவாலவாய நல்லுாரில் தர்ணா போராட்டம்
-
பழனிசாமியை வரவேற்ற அ.தி.மு.க., நிர்வாகிகள்
-
உயிர்களை காவு வாங்கும் குவாரி குட்டைகள் கண்டும் காணாமலும் அதிகாரிகள்
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Advertisement
Advertisement