கட்சி நிர்வாகிகளை நீக்கி பழனிசாமி நடவடிக்கை


செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் கொங்கு மண்டல நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.


இந்நிலையில், செங்கோட்டையன் ஆதரவாளர்கள் இருவரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், நான்கு பேரை கட்சி பதவிகளில் இருந்தும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நீக்கியுள்ளார்.


அவரது அறிக்கை:



அ.தி.மு.க.,வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், அத்தாணி பேரூராட்சி முன்னாள் துணை செயலர் மருதமுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஐ.டி., விங் துணைத் தலைவர் மணிகண்டன் ஆகியோர், அ.தி.மு.க., அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர்.




ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய செயலர் செல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலர் அருள் ராமச்சந்திரன்.



மாவட்ட ஐ.டி., விங் செயலர் செந்தில் என்கிற கோடீஸ்வரன், சத்தியமங்கலம் நகர ஜெயலலிதா பேரவை இணை செயலரும், 24வது வார்டு செயலருமான காமேஷ் ஆகியோர், அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





- நமது நிருபர் -

Advertisement