திருச்சி கிழக்கில் விஜய் போட்டியா?

சட்டசபை தேர்தலில், த.வெ.க., தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில், போட்டியிட வாய்ப்பு உள்ளது என, அவரது கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
அடுத்த ஆண்டு தேர்தலில், முதன்முறையாக, த.வெ.க. போட்டியிடுவதால், த.வெ.க.வுக்கு என்ன சின்னம் கிடைக்கும், எந்த தொகுதியில் விஜய் போட்டியிடுவார் என்று அக்கட்சியினர் ஆர்வமாக விவாதிக்கின்றனர்.
வரும் 13ம் தேதி, திருச்சியில் பிரசார சுற்றுப்பயணத்தை விஜய் துவக்க உள்ளார். திருச்சி கிழக்கு, திருவாடானை, மதுரை மேற்கு என மூன்று சாதகமான தொகுதிகளை கட்சியினர் கண்டறிந்துள்ளனர். திருச்சி கிழக்கு தொகுதியில், ஆதிதிராவிடர் ஓட்டுகளும், கிறிஸ்துவ, முஸ்லிம் ஓட்டுகளும், வெள்ளாளர் ஓட்டுகளும், அதிகம் உள்ளன.
எனவே, விஜய் அங்கு போட்டியிட்டால், வெற்றி நிச்சயம் என அவர்களின் சர்வேயில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், திருச்சி கிழக்கு தொகுதியில், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை விட, 50 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
வரும் தேர்தலில், அத்தொகுதியில் போட்டியிட, அமைச்சர் மகேஷ் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் திருச்சி கிழக்கு தற்போதே முக்கியத்துவம் பெற துவங்கி உள்ளது.
- நமது நிருபர் -




மேலும்
-
நீர்வளத்துறை உருவாக்கியது ஏன்: முதல்வருக்கு நயினார் கேள்வி
-
நாட்டின் நீளமான கண்ணாடி பாலம்: ஆந்திராவில் செப்டம்பர் 25ல் திறப்பு
-
முதல்வர் கோப்பை போட்டியில் 290 மாற்றுத்திறன் வீரர் - வீராங்கனையர் பங்கேற்பு
-
மாநில பூப்பந்தாட்ட போட்டி நாய்க்கன்பேட்டை அணி தகுதி
-
80 வயது மூதாட்டியை குடும்பத்துடன் இணைத்து வைத்த காவல் கரங்கள்
-
விழுப்புரம் - திருப்பதி ரயில் 20 நாட்களுக்கு ஒரு பகுதி ரத்து