த.வெ.க.,வை பார்த்து ஆளுங்கட்சி நடுங்குகிறது: விஜய் காட்டம்

சென்னை : 'த.வெ.க.,வின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளை கண்டாலே, ஆளுங்கட்சி அஞ்சி நடுங்குகிறது' என, அக்கட்சி தலைவர் விஜய் கூறியுள்ளார்.


அவரது அறிக்கை:



த.வெ.க., மீது மக்களிடையே ஆதரவும், அன்பும் பெருகி வருகிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க., அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில், பொதுச்செயலர் ஆனந்த் மற்றும் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.




தற்போதைய ஆளுங்கட்சி, யாருக்கு பயப்படுகிறதோ இல்லையோ; த.வெ.க.,வை கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது. தேர்தல் பிரசார பயணம் என்பது, அனைத்து கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகபூர்வமான பிரதான நடவடிக்கைதான்.

மற்ற கட்சிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் இந்த அரசு, த.வெ.க.,வின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளை கண்டாலே அஞ்சி நடுங்குகிறது.




தோல்வி பயத்தால், ஆட்சியாளர்கள் தங்களின் துாக்கத்தை இழந்து, முழு நேரமும் த.வெ.க.,வை வீழ்த்துவதை பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து, கட்சியின் செயல்பாட்டை முடக்க நினைக்கின்றனர்.



அதன் ஒருபகுதிதான், திருச்சியில் த.வெ.க.,வினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. தி.மு.க., அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கையை கண்டிக்கிறேன். த.வெ.க.,வினர் மீது பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.


@block_B@ பாதுகாப்பு கேட்டு டி.ஜி.பி.,யிடம் மனு த.வெ.க., தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கோரி, அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த், டி.ஜி.பி., அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனந்த் அளித்துள்ள மனு: த.வெ.க., தலைவர் விஜய், வரும் 13ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை, அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். அதன்படி, 13ம் தேதி, திருச்சி, பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களில் துவங்கி, அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் சந்திப்பு நிகழ்வு நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சிகளின்போது, அந்தந்த இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் போக்குவரத்தை முறைபடுத்தி தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.block_B

Advertisement