கள் விடுதலை, மதுவிலக்கு மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும் கூறுகிறார் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி

பழநி:''திருச்சியில் டிசம்பரில் நடக்க உள்ள கள் விடுதலை, மதுவிலக்கு மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும் ''என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.

பழநியில் அவர் கூறியதாவது:

டிசம்பரில் கள் விடுதலை மாநாடு திருச்சியில் நடக்க உள்ளது. இதில் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கலந்து கொள்ள உள்ளார். பீஹாரில் மது விலக்கு அமல்படுத்தப்பட்ட பிறகு அமைதி நிலவி உள்ளது. சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன.

அங்கு கள்ளச்சாராய சாவுகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. ஆனால் தமிழகத்தில் கள்ளச்சாராய சாவுகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

2021 சட்டசபை தேர்தல் தேதி முன் அப்போது முதல்வராக இருந்த பழனிசாமி பனை, தென்னை, ஈச்ச மரங்கள் வைத்துள்ள விவசாயிகள் நீராகாரம் இறக்கி மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்க அனுமதித்திருந்தால் ஆட்சி மாற்றம் நடந்திருக்காது. பழனிசாமி மீண்டும் இந்த தவறை செய்ய மாட்டார் என நம்புகிறோம்.

டிசம்பரில் கள் இயக்கம் நடத்தும் கள் விடுதலை ,மதுவிலக்கு மாநாடு அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். 2026 தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி இந்த மாநாட்டிற்கு இருக்கும் என்றார்.

Advertisement