உலக விஞ்ஞானிகளின் பட்டியலில் இடம் பெற்ற கலசலிங்கம் பல்கலை 13 பேராசிரியர்கள்
ஸ்ரீவில்லிபுத்துார்: அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலை வெளியிட்ட உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளின் மதிப்புமிக்க பட்டியலில் கலசலிங்கம் பல்கலை 13 பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர். என துணை தலைவர் சசி ஆனந்த் தெரிவித்தார்.
அவரின் செய்தி குறிப்பு;
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலை வெளியிட்ட உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளின் மதிப்புமிக்க பட்டியலில் கலசலிங்கம் பல்கலை 13 பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அங்கீகாரம் அவர்களின் சிறந்த ஆராய்ச்சி தாக்கம், உலகளாவிய மேற்கோள்கள், அந்தந்த துறைகளில் அவர்களின் பங்களிப்புக்கு ஒரு சான்றாகும்.
இதன்படி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி, பட செயலாக்கம், பாலிமர்ஸ், மெட்டீரியல்ஸ், வேதியியல், உயிரியல், ஆற்றல், கனிம மற்றும் அணு வேதியியல், மருந்தியல் மற்றும் மருந்தகம், பயன்பாட்டு இயற்பியல் ஆகிய துறைகளில் பேராசிரியர்கள் தேவராஜ், அனுமகொண்டா வரதராஜுலு, தியாக மணி செந்தில் முத்து குமார், ரஜினி நாகராஜன், ஆறுமுகப்பெருமாள் வீரசிம்மன், ஆதம் கான், மீனாட்சிசுந்தரம் சுவாமிநாதன், பத்ரிநாத் சங்கரநாராயணன், சங்கீதா குமாரவேல், குஞ்சிப்பன் செல்வராஜ், அசாத் பகதூர் சுல்தான், சின்னச்சாமி, நாகராஜ் ஆகிய பேராசிரியர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இவர்களை வேந்தர் ஸ்ரீதரன், துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் பாராட்டினர்-என தெரிவித்துள்ளார்.