டில்லியில் பட்டாசு தயாரிக்கலாம் விற்பனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை

1

தலைநகர் டில்லியில், பசுமை பட்டாசுகளை தயாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அதே நேரத்தில், 'பட்டாசுகளை அங்கு விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும்' என, அறிவித்துள்ளது.


பட்டாசுகளால் கடுமையான காற்று மாசு ஏற்படுவதால், பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிப்பதுடன், பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


இந்த பொதுநல மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு தயாரிக்க, விற்பனை செய்ய மற்றும் வெடிக்க முழுமையான தடை விதித்திருந்தது.




உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.



அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட பட்டாசு உற்பத்தியாளர்கள் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம். ஆனால் இங்கு விற்பனை செய்யக்கூடாது. இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அமைப்பினருடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி உரிய தீர்வை காண வேண்டும்' என, உத்தரவிட்டனர்.




- டில்லி சிறப்பு நிருபர் -

Advertisement