அரசு பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம்

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் என்.எல்.சி.,மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடந்தது.

மந்தாரக்குப்பம் அடுத்த வேப்பங்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த முகாமிற்கு என்.எல்.சி., பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) மெர்சிமேக்டலின் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஞானதீர்த்தம் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர் என்.எல்.சி., பள்ளிகள் செயலாளர் பிரபாகரன், முகாமை துவக்கி வைத்தார்.

முகாமில், பெண் கல்வி ஊக்குவித்தல், டெங்கு ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு, நெகிழி ஒழிப்பு, மரக்கன்று நடுதல் மற்றும் துாய்மை பணி கள் மேற்கொள்ளப்பட்டன.

உதவி தலைமை ஆசிரியர் சேகர், உடற்கல்வி இயக்குநர் ராஜலக்ஷ்மி, ஆசிரியர் ஜெயலட்சுமி, லட்சுமி நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆசிரியர் சத்யராஜ் நன்றி கூறினார்.

Advertisement