மொபைல் போன் கடை கண்ணாடி உடைப்பு

திருக்கனுார்: திருக்கனூர் அடுத்த கைக்கிலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் திருமுருகன். இவர் திருக்கனூர் சரஸ்வதி நகர் செல்லும் சாலையில் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கூனிச்சம்பட்டு சேர்ந்த சுரேஷ் என்பவர் 2 நாட்களுக்கு முன் தனது மொபைலை சரி செய்ய கொடுத்திருந்தார்.

நேற்று இரவு சுரேஷ் மற்றும் அவரது நண்பர் இருவரும் கடைக்கு சென்று சரி செய்ய கொடுத்த மொபைலை கேட்டுள்ளனர். அப்பொழுது மொபைல் போன் இன்னும் சரி செய்யவில்லை எனக்கடைகாரர் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர் கடையின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். புகாரின் பேரில் திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கடையின் கண்ணாடியை உடைக்கும் சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement