நேபாளத்தில் மினிபஸ் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி, 24 பேர் காயம்

காத்மாண்டு: நேபாளத்தில் மினிபஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் காயம் அடைந்தனர்.
நேபாளத்தின் லும்பினி மாகாணத்தில் இன்று (செப் 29) புட்வாலில் இருந்து புர்கோட்டாஹாவுக்கு பயணிகள் 26 பேரை ஏற்றுக்கொண்டு சென்ற மினிபஸ் விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புபடையினர் மற்றும் போலீசார் விரைந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு 10 வயது மற்றும் 13 வயது என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் 24 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பிரேக் செயலிழப்பு மற்றும் அதிக கூட்ட நெரிசல் காரணமாக விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement