1,340 டன் யூரியா உரம் சரக்கு ரயிலில் வருகை

விருத்தாசலம் : ஆந்திர மாநிலத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு சம்பா நெல் சாகுபடிக்கு 1,340 டன் யூரியா உரம், சரக்கு ரயிலில் வந்திறங்கின.
மத்திய அரசின் இந்தியன் பொட்டாஷ் லிமிடெட்., (ஐ.பி.எல்.,) நிறுவனத்தில் இருந்து 1,340 டன் யூரியா உரம், ஆந்திர மாநிலம், கங்காவரம் துறைமுகத்தில் இருந்து 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில், விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு நேற்று அதிகாலை வந்தடைந்தன.
இங்கிருந்து கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் அரசியலுார் மாவட்ட கூட்டுறவு சொசைட்டிகள் மற்றும் தனியார் உர நிறுவனங்களுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலுார் மாவட்டங்களுக்கு தலா 200 டன் அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ள 740 டன் யூரியா உரம் கடலுார் மாவட்ட சம்பா விவசாயிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்தது.
மேலும்
-
மாணவி, சிறுமி மாயம்
-
மிரட்டல் - மறியல் எதிரொலியால் வாரச்சந்தைக்கு நேரம் நிர்ணயம்
-
தனியார் நிறுவன மேற்பார்வையாளர் கொலை கொலையாளிகளுக்கு போலீசார் வலை
-
நாமக்கல்லில் த.வெ.க., பிரசார கூட்டத்தில் காயமடைந்தவருக்கு அமைச்சர் ஆறுதல்
-
அடிப்படை வசதி கேட்டு மறியல் போலீசுடன் மக்கள் வாக்குவாதம்
-
அனுமதியற்ற பிளக்ஸ் பேனர்கள் தாராளம் ப.வேலுார் டவுன் பஞ்., நிர்வாகம் அலட்சியம்