மகாபாரதம் தொடரில் கர்ணனாக நடித்த பங்கஜ் தீர் காலமானார்

1

புது டில்லி: மகாபாரத தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் 68, இன்று புற்றுநோயால் காலமானார்.
டிவியில் பி.ஆர் சோப்ராவின் மகாபாரத தொடரில் கர்ணனாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பங்கஜ் தீர். இவருக்கு நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.

தொடர் சிகிச்சை அளித்து வந்த போதிலும் பலனின்றி அவர் இன்று காலமானார்.
அவரது மறைவுக்கு நடிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement