எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்கும் வகையில் செயல்படும் போலீசார்; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சென்னை: எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குவது போல் முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி போலீசார் செயல்படுகின்றனர் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.
சென்னை சட்டசபை வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ஒவ்வொரு கட்சி தலைவர் வாரியாக பேசும் போது, கரூர் சம்பவத்தில் என்னென்ன நடந்தது என்பதை நாங்கள் சுட்டிக் காட்டினோம்.
முதல்வர் ஸ்டாலின் பேசும்போது ஒருதலை பட்சமாக, அவர்கள் பக்கம் எந்த குறையும் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் நடந்தது என்ன என்பதை பலமுறை நாங்கள் ஊடகங்களில் சொல்லியிருந்தாலும் கூட, இன்று சட்டசபையிலும் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. காரணம் முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கரூர் வேலுச்சாமி புரத்தில் பேச்சை ஆரம்பிக்கும் போது பத்து ரூபாய் பாட்டில் கமிஷன் என்று சொல்லும்போது அவர் மீது செருப்பு வீசப்பட்டு இருக்கிறது. செருப்பு வீசப்பட்டது மட்டுமல்ல, உடனடியாக ஜெனரேட்டர் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது.
கரண்ட் ஆப் செய்து லத்தி சார்ஜ் நடந்து இருக்கிறது.
ஆனால் இங்கு பேசும்போது அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னார்கள். 5 டிஎஸ்பி, 500 போலீசார் இருந்ததாக சொன்னார். அங்கு போலீசார் யாருமில்லை. டிஎஸ்பியும் யாரும் இல்லை. இருந்திருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது. அதுமட்டுமின்றி எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்கிற மாதிரி, முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி போலீசார் செயல்படுகின்றனர்.
எதிர்க்கட்சியினர் என்ன கூட்டம் நடத்தினாலும் நாங்கள் கேட்கிற இடத்திற்கு அனுமதி தருவதில்லை. நீதிமன்றம் சென்று தான் நாங்கள் அனுமதி பெற வேண்டிய சூழல் இருக்கிறது.
அதுமட்டுமல்ல, கரூரில் ரவுண்டானா பகுதியில் பிரசாரம் நடத்த தவெகவினர் அனுமதி கேட்டிருந்தனர்.
அந்த இடத்தில் அனுமதி கொடுத்து இருந்தால் 41 பேர் உயிரிழந்திருக்க மாட்டார்கள். அதே நேரத்தில் குறுகலான இடத்தில் அனுமதி கொடுத்து, 41 பேர் சாவிற்கு தமிழக அரசு காரணமாக இருந்தது வருத்தத்திற்கும், வேதனைக் குரியதாகவும் இருக்கிறது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
வாசகர் கருத்து (6)
Indian - kailasapuram,இந்தியா
15 அக்,2025 - 20:17 Report Abuse

0
0
Reply
T.sthivinayagam - agartala,இந்தியா
15 அக்,2025 - 19:21 Report Abuse

0
0
Reply
Mario - London,இந்தியா
15 அக்,2025 - 18:32 Report Abuse

0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
15 அக்,2025 - 16:52 Report Abuse

0
0
Reply
sankar - Nellai,இந்தியா
15 அக்,2025 - 16:43 Report Abuse

0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
15 அக்,2025 - 16:10 Report Abuse

0
0
Reply
மேலும்
-
திருமுருகன்பூண்டி நகராட்சியின் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தில் சர்ச்சை! நல்லாறு ஓடை அருகில் பணிகள் அனுமதியின்றி நடப்பதாக புகார்
-
உத்திரமேரூர் ஏரியில் மண் கடத்தல்
-
காமாட்சியம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.53 லட்சம்
-
மதுபோதை ஆசாமிகளுக்கு அபராதம்.. ரூ.47.83 கோடி! 20 சதவீதம் மட்டுமே இதுவரை வசூல்
-
இளைஞர் எழுச்சி நாள்: விழிப்புணர்வு போட்டி
-
நிலச்சரிவுக்கு தீர்வு! மண்ணை தாங்கிப்பிடிக்கும் வேர்கள் மழையால் வலிமையான 'மண் ஆணி'
Advertisement
Advertisement