முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நிதி உதவி அதிகரிப்பு: மத்திய அரசு ஒப்புதல்

புதுடில்லி: முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்போருக்கான நிதி உதவியில் 100 சதவீதம் அதிகரிப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கேந்திரிய சைனிக் வாரியம் மூலம் முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்போருக்கான நிதி உதவியில் 100 சதவீதம் அதிகரிப்புக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
வயதான முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வூதியம் பெறாத முன்னாள் ராணுவத்தினர் மற்றும் வழக்கமான வருமானம் இல்லாத 65 வயதுக்கு மேற்பட்ட விதவைகளுக்கு நிலையான வாழ்நாள் ஆதரவை வழங்கும் வகையில், ஒரு பயனாளிக்கு மாதத்திற்கு ரூ.4,000 லிருந்து ரூ.8,000 ஆக ஓய்வூதிய மானியம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
கல்வி மானியம்:
(ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை) அல்லது இரண்டு ஆண்டு முதுகலைப் படிப்பைத் தொடரும் விதவைகளுக்கு கல்வி மானியம் மாதத்திற்கு ரூ.1,000 லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
திருமண மானியம் :
ஒரு பயனாளிக்கு ரூ.50,000 லிருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினரின் இரண்டு மகள்கள் வரைக்கும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு நடைபெறும் விதவை மறுமணத்திற்கும் பொருந்தும்.
திருத்தப்பட்ட விகிதங்கள், நவம்பர் 01, 2025 முதல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டங்கள் ஆயுதப்படை கொடி நாள் நிதியின் (ஏஎப்ப் டிஎப்) துணைக்குழுவான மத்திய அமைச்சக முன்னாள் படைவீரர் நல நிதியின் மூலம் நிதியளிக்கப்படுகின்றன.
இந்த முடிவு ஓய்வூதியம் பெறாத , விதவைகள் மற்றும் குறைந்த வருமானக் குழுக்களைச் சேர்ந்த சார்புடையவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது, இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
திருமுருகன்பூண்டி நகராட்சியின் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தில் சர்ச்சை! நல்லாறு ஓடை அருகில் பணிகள் அனுமதியின்றி நடப்பதாக புகார்
-
உத்திரமேரூர் ஏரியில் மண் கடத்தல்
-
காமாட்சியம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.53 லட்சம்
-
மதுபோதை ஆசாமிகளுக்கு அபராதம்.. ரூ.47.83 கோடி! 20 சதவீதம் மட்டுமே இதுவரை வசூல்
-
இளைஞர் எழுச்சி நாள்: விழிப்புணர்வு போட்டி
-
நிலச்சரிவுக்கு தீர்வு! மண்ணை தாங்கிப்பிடிக்கும் வேர்கள் மழையால் வலிமையான 'மண் ஆணி'