சென்னை ஏ.ஐ., ஸ்டார்ட்அப் ரூ.2,288 கோடி நிதி திரட்டியது
சென்னை:சென்னையைச் சேர்ந்த ஏ.ஐ., 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான, 'யுனிபோர்' பல்வேறு முதலீட்டாளர்களிடம் இருந்து, 2,288 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளது.
யுனிபோர் நிறுவனம், 2008ல் துவக்கப்பட்டது. உலகளவில் செயல்படும் அந்நிறுவனம், உரையாடல் ஏ.ஐ., வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறது. இதனால், மனித தவறுகள் ஏற்படுவதில்லை. வாடிக்கையாளர்ளுக்கு நேரம் மிச்சமாகிறது.
இதன் சேவையை வங்கி, விமானம், சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.
தற்போது யுனிபோர் நிறுவனம், என்.வி.ஐ.டி.ஐ.ஏ., - ஏ.எம்.டி., ஸ்னோபிளேக், டேட்டாபிரிக்ஸ் ஆகிய முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து, 2,288 கோடி ரூபாய் நிதியாக திரட்டியுள்ளது. இந்த நிதி, ஏ.ஐ., மற்றும் தரவு தளமான, 'பிசினஸ் ஏ.ஐ., கிளவுடில்' புதுமைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்தின், 'எக்ஸ்' தளத்தில், 'உரையாடல் ஏ.ஐ.,யில் முன்னணியில் உள்ள சென்னையில் துவக்கப்பட்ட யுனிபோர் நிறுவனத்தின் மதிப்பு, 22,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகி உள்ளது. இந்த மைல்கல், சென்னையை உலகளாவிய ஏ.ஐ., வரைபடத்தில் உறுதியாக நிலைநிறுத்துகிறது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி; விதி மீறி வழங்கியதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
-
அக். 30ல் தென் கொரியா உச்சி மாநாட்டில் சீன அதிபரை சந்திக்கிறார் டிரம்ப்
-
ரஷ்யா தாக்கப்பட்டால் கடும் பதிலடி: அமெரிக்காவின் அழுத்தம் பலனளிக்காது என்கிறார் அதிபர் புடின்
-
அக். 29ல் டில்லியில் செயற்கை மழை சோதனை துவக்கம்
-
ஆந்திராவில் துயர சம்பவம்: பஸ்சில் தீ பற்றியதில் பயணிகள் 25 பேர் பரிதாப பலி
-
மின்கம்பத்தை இழுத்த யானை மின்சாரம் பாய்ந்து பலி