60 நாட்களில் குற்றப்பத்திரிகை; கோர்ட் வகுத்தது புதிய நெறிமுறை
குற்ற வழக்குகளில், 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு முன், ஜாமின் வழக்கு ஒன்று நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குறிப்பிட்ட வழக்கில் இரண்டு ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் நிலுவையில் இருந்ததை அறிந்து நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.
நாடு முழுதும் உள்ள குற்ற வழக்குகளில், குற்றபத்திரிகை சரியான நேரத்தில் தாக்கல் செய்யப்படாததால் பலரும் தொடர்ந்து சிறையிலேயே அடைக்கப்பட்டு இருப்பதாக கூறிய நீதிபதிகள், இந்த பிரச்னையை சரி செய்யும் வகையில் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு உதவ, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி நாகமுத்து மற்றும் மூத்த வழக்கறிஞர் சித்தார்த்ரா ஆகியோரை நியமித்தனர்.
அதோடு, 'இந்த விவகாரத்தில் மத்திய அரசு கருத்துகளை தெரிவிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -
முக்கிய குற்றவாளியான தம்பியை ஆண்டுக் கணக்கில் ஒளித்து வைத்தார். அப்புறம் எப்படி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வது?.
என்னக்கு போர் இன்னும் படியாமல்.௨௦௧௩ இல் இருந்து தூத்துக்குடி கோர்ட்டில்.பல்லக்கு நடந்துகொண்டு நடந்துகோண்டு இருக்கிறது.மோதலை வக்கீலுக்கு முன்தலைவிசே.வக்கிரஸி கொட்டுக்கவேண்டியுள்ளது.சாப்ப்பிடவள்ளியில்லாமல் பசிக்கும்பட்டினியுமாக இருக்கிறோம்.த
அறிவு மழுங்கிய ஊழல் நீதிபதிகள் நிறைந்த அநீதிமன்றமே உனக்கு ஒரு சட்டம் விதித்துக்கொள் இப்படி "எந்த ஒரு வழக்குக்கும் 30 நாட்களில் தீர்ப்பு வரும்" . ஒவ்வொரு வழக்கும் நடக்குமாம் 20 வருடங்கள்???கொஞ்சம் கூட நேர மதிப்பு அறியாத நீங்களெல்லாம் நெறிமுறை அமைக்கின்றீர்களா???
இந்த விவகாரத்தில் மத்திய அரசு கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர் என்பது செய்தி. குற்றவியல் சட்டங்களை இயற்றியது பாராளுமன்றம். அதனை சட்டமாக்கியது ஜனாதிபதி. குற்றவியல் சட்டப்படி காவல்துறை நடக்கிறதா என்று விசாரிப்பது நீதிமன்றங்களின் வேலை. இதில் மத்திய அரசு என்ன கருத்துக்களை தெரிவிக்கவேண்டும்? எதெற்கெடுத்தாலும் மத்திய அரசின் கருத்துக்களை கேட்கும், உச்சநீதிமன்றம், திமுக வழக்கில் மட்டும் மத்திய அரசின் கருத்துக்களை கேட்காமல் மசோதாக்கள் விஷயத்தில் தான்தோன்றித்தனமாக திமுகவிற்கு ஆதராகவே தீர்ப்பு சொன்னார்களே, அதுவும் கவர்னருக்கும் ஜனாதிபதிக்கும் காலக்கெடு வைத்து தீர்ப்பு சொன்னார்களே. கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் காலக்கெடு வைக்கமுன்னால், இது குறித்து மத்திய அரசிடம் கருத்துக் கேட்டார்களா? இதிலிருந்தே தெரிகிறது, உச்சநீதிமன்றம் எந்த அளவில் பணிபுரிகிறது என்று.
குற்ற பத்திரிக்கைக்கு டைம் லிமிட் வைக்கும் நீங்கள், ஒரு வழக்குக்கு இத்தனை நாட்களுக்குள் நீதி வழங்கி பைலை க்ளோஸ் பண்ணணும்முனு ஏன் டைம் லிமிட் வைப்பதில்லை?
வழக்கை முடித்து 90 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கவேண்டும் என்று உங்களுக்குளேயே ஒரு நெறிமுறையை வகுத்துக்கொள்ளலாமே ?மேலும்
-
லாலு கட்சி வென்றால் காட்டாட்சி வரும்; அமித்ஷா ஆருடம்
-
ஐதராபாத் வந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் பீதி
-
மனவேதனை அடைந்தேன்; ஆந்திர கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல்
-
வறுமையை அருகில் இருந்து பார்த்துள்ளேன்: பிரதமர் மோடி
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை; ஜப்பான் பிரதமர்
-
நவ.,05 ல் அதிமுக மாசெக்கள் கூட்டம்