அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்




ஈரோடு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தேர்தல் வாக்குறுதிப்படி அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வின்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு, 10 லட்சம், உதவியாளர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை அமலாக்க வேண்டும்.


மே மாதம் விடுமுறையை ஒரு மாத காலம் வழங்க வேண்டும். கடந்த, 1993ல் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட தலைவர் ராதாமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Advertisement