போலீஸ் செய்திகள்

வீட்டில் ஒயர் திருட்டு

வேடசந்துார்: பழைய கோட்டையை சேர்ந்தவர் பிரபு 40. தான் குடியிருக்கும் வீட்டின் அருகில் புதிதாக வீடு கட்டி வருகிறார். ஒயரிங் வேலைக்காக 25 காயில் ஒயர்களை வீட்டில் வைத்திருந்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த சிலர் யாசகம் கேட்டு வீட்டுக்கு வந்த நிலையில் ஒயர்களை திருடி சென்றனர். சி.சி.டிவி.,பதிவுப்படி வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

ரோட்டில் கவிழ்ந்த லாரி

வேடசந்துார்: கிருஷ்ணகிரி மாவட்டம் சூலுாரிலிருந்து மதுரை பறவையை நோக்கி காய்கறி ஏற்றி வந்த லாரி நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு வந்தது. ஓசூரை சேர்ந்த ஸ்ரீதர் 45, ஓட்டி வந்தார். வேடசந்துார் ரங்கநாதபுரம் வரும் போது கட்டுப்பாட்டை இழந்த லாரி டிவைடரை யொட்டி கவிழ்ந்தது. கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொழிலாளி பலி

சாணார்பட்டி: கன்னியாபுரத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பழனிமுத்து 50. டூவீலரில் மேட்டுக்கடை அம்மா மண்டபம் அருகே சென்ற போது நாய் குறுக்கே வர நிலை தடுமாறி விழுந்ததில் இறந்தார். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

துாக்கில் தொங்கிய உடல்

பழநி: சண்முக நதி சின்னாற்றங்கரை அருகே உள்ள மரத்தில் 30 வயது ஆண் உடல் துாக்கில் தொங்கிய நிலையில் கிடந்தது. பழநி டவுன் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

மரம் விழுந்து தொழிலாளி பலி

கொடைக்கானல்: கம்பம் நடராஜர் நகரை சேர்ந்தவர் மரம் வெட்டும் தொழிலாளி இளங்கோ 39. கொடைக்கானல் பெருமாள்மலை பிலக்கவை தனியார் தோட்டத்தில் வெட்டிய மரத்தை வேனில் ஏற்றும் போது மரம் விழுந்ததில் இளங்கோ இறந்தார். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.

மிரட்டியவர் கைது

திண்டுக்கல்: மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கந்தவேல் 42 . ஸ்பென்சர் காம்பவுண்ட் தங்கும் விடுதியை கடந்து நடந்து சென்றபோது அங்குள்ள காலி இடம் அருகே வழிமறித்த பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த மணிகண்டன் 21, பீர்பாட்டிலை உடைத்து பணம் கேட்டு மிரட்டினார். நகர் வடக்கு போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

பஸ் மீது மோதிய கார்

வேடசந்துார்: திருப்பத்தூர் மாவட்டம் கனமந்துாரை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் ஸ்ரீ நவீன் 33. காரில் நண்பர்கள் அருண், ஹரிஷ் உடன் துாத்துக்குடி மாவட்டம் குரும்பூர் சென்றார்.

வேடசந்துார் காக்கா தோப்பூர் பிரிவு அருகே சென்ற போது தனியார் பஸ் மீது கார் மோதியது. பாதுகாப்பு பலுான்கள் ஓபன் ஆனதால் காரில் வந்தவர்களுக்கு காயம் இல்லை. வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement