தொழிற்சாலை ரெய்டில் ரூ.22 கோடி மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட மருந்து பறிமுதல்; குஜராத்தில் 4பேர் கைது
ஆமாதாபாத்: குஜராத்தில் ரகசியமாக செயல்பட்ட தொழிற்சாலையில் நடத்திய ரெய்டில், ரூ.22 கோடி மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட மருந்துகளை வருவாய் புலனாய்வு இயக்குநரகம்(டிஆர்ஐ) அதிகாரிகள் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர்.
குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் ஒரு தொழிற்சாலையில் ரகசியமாக போதை மருந்துகள் உற்பத்தி செய்வதாக புகார் எழுந்த நிலையில், வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.22 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட மருந்துகள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
புலனாய்வு இயக்குநரகம் அறிக்கை:
முறையான ஆவணங்கள் அல்லது மருத்துவ உரிமம் இல்லாத எந்தவொரு செயலும் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆபரேஷன் ஒயிட் கோல்ட்ரான் என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையின் விளைவாக ரூ.22 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட மருந்துகள் (அல்பிரஸோலம்) பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், நிதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களான மூளையாகச் செயல்பட்டவர்கள் மற்றும் மருந்துகளை பெற்ற ஒருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், தயாரிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட மருந்துகள் தெலுங்கானாவிற்கு வழங்குவதற்காகவும், கள்ளில் கலக்கவும் பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும் விசாரணை நடைபெறுகிறது.
இவ்வாறு புலனாய்வு இயக்குநரக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எங்கே யாரையும் இந்தப் பகுதியில் காணவில்லையே, ஓ நடந்தது குஜராத்தில் என்பதால் எல்லோரும் பம்மி விட்டார்களா?
ஆப்ரோஸ்லோம் controlled drugமேலும்
-
போராடி வென்றார் பிரக்ஞானந்தா * உலக கோப்பை செஸ் தொடரில்...
-
துருவ் ஜுரெல் சதம் * இந்திய 'ஏ' திணறல் ஆட்டம்
-
நியூசிலாந்து 'திரில்' வெற்றி * கடைசி பந்தில் வீழ்ந்தது வெ.இண்டீஸ்
-
'வந்தே மாதரம்' எழுதி 150 ஆண்டு நிறைவு: ஓராண்டு கொண்டாட மத்திய அரசு உத்தரவு
-
உலக விளையாட்டு செய்திகள்
-
அமெரிக்காவில் 10 மாதங்களில் 80,000 விசாக்கள் ரத்து