கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

சென்னிமலை:-சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு கிராம நிர்வாக அலுவலர் அருள்குமரன், சென்னிமலை- அரச்சலுார் ரோடு, அம்மாபாளையம் அருகே நேற்று சோதனையில் ஈடுபட்டார். அப்போது வந்த ஒரு டிப்பர் லாரியில், மூன்று யூனிட் கிராவல் மண் இருந்தது. உரிய அனுமதி இல்லாததால், சென்னிமலை போலீசில் லாரியை ஒப்படைத்தார்.


போலீசார் விசாரணையில் டிப்பர் லாரி டிரைவர் மற்றும் லாரி உரிமையாளர் சென்னிமலை, காந்தி நகரை சேர்ந்த கார்த்திகேயன், 32, என்பது தெரிந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

Advertisement