'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி

செஞ்சி: செஞ்சி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி நடந்தது.

புதுச்சேரி தினமலர் - பட்டம் இதழ், ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி வினா போட்டி செஞ்சி சாரதா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்தது.

போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் 16 மாணவர்களை தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரித்து, 2 சுற்று போட்டி நடந்தது.

இதில் மாணவிகள் தர்ஷா, மோகனஸ்ரீ அணி முதல் இடமும், மாணவர்கள் லோகேஷ்வரன், ஹரிஹரன் அணி இரண்டாம் இடமும் பிடித்தனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு தாளாளர் கலைச்செல்வன் சான்றிதழ் மற்றும் கேடயத்தையும், பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.

நிர்வாக அலுவலர் அருள், ஆசிரியர்கள் பர்ஜானா, பிரித்தி பிரதிபா பங்கேற்றனர்.

Advertisement