முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
சென்னை: முதலீடுகளை முதல்வர் ஸ்டாலின் கோட்டை விடுகிறார் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகத்தில் ரூ.1720 கோடி முதலீடு செய்யவிருந்த தென்கொரிய நிறுவனம் 'ஹ்வாஸுங்', தற்போது தமிழகத்தை விட்டு ஆந்திராவில் முதலீடு செய்யவிருப்பதாய் அறிவித்த சேதி அறிவீர்களா? தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்று வீண் பேச்சு பேசும் முதல்வர், உங்கள் திமுக அரசின் விளைவாகத் தான் தமிழக இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய 20,000 நேரடி வேலைவாய்ப்புகள் இன்று பறிபோயுள்ளன.
"புலி வருது, புலி வருது" என்பது போல ஒவ்வொரு முறையும் தாங்கள் முதலீடு வருகிறது என்று விளம்பரம் வெளியிடுவதும், பின் அந்த முதலீடு அண்டை மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாய் செய்தி வருவதும் தொடர் கதையாகி வருகிறது.
முதலீட்டை ஈர்க்கிறேன் என வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றுவிட்டு வெறுங்கையுடன் திரும்புவது, தானாகக் கிடைத்த முதலீட்டையும் எந்தவொரு முயற்சியும் எடுக்காது கோட்டை விடுவது, தமிழகத்தின் எதிர்காலத்தைச் சிதைப்பது என மும்முரமாக இருக்கும் நீங்கள், மீண்டுமொரு முறை ஆட்சிக் கோட்டையைப் பிடித்து தமிழகத்தைத் தலை நிமிரச் செய்வேன் என்று முதல்வர் கூறுவதை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழகமும் வளர வேண்டும், அண்டை மாகாணங்களும் வளர வேண்டும்.
தென் கொரிய முதலீடு ஆந்திரா சென்று விட்டது! தமிழ்நாடு முதலீடு கர்நாடகா சென்று விட்டது!
யார் சொன்னது? அவர்தான் சிறப்பாக முதலீடு செய்கிறார். துபாய் போகிறார், லண்டன் போகிறார், அமேரிக்கா போகிறார், சிங்கப்பூர் போகிறார் - அத்தனை நாடுகளிலும் முதலீடு செய்ய நிறுவனங்கள் வைத்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் வேலை கிடைக்காததால் படித்தவர் படிக்காதவர்கள் வெளிநாட்டிற்கு செல்கின்றனர். இவர்களின் வயதான தாய் தந்தையர் மட்டும் இங்கு உள்ளனர். இவர்கள் வாழ்வாதாரத்திற்கு மட்டும் பணம் அனுப்புகின்றனர். அப்படி சென்றவர்கள் தாய் நாட்டிற்கு திரும்புவதில்லை. குழந்தைகள் மேல்படிப்பு அங்கே நடைபெறுகிறது. இந்த நிலை தொடருமானால் நினைக்கவே பயமாக உள்ளது. இங்கு உள்ளவர்கள் மனோ நிலை பாதிப்பு அடையும்.
அப்பா என்ன சொல்ல வருகிறீர் படிக்கச் கூடாது இல்லை படிச்சு வேலைக்கு வெளிநாடு செல்ல கூடாது. வெளிநாட்டு சுர்ரெனசி வரவில்லை எனில் எப்படி இந்தியா வல்லரசு ஆகும்
பீகாரில் இருந்து தமிழகம் வந்து வேலை செய்ய பிழைப்புக்கு வருவோரை என்ன சொல்வீர்கள் ஒரு மாநில தேர்தலுக்கு ஆக இத்தனை சிறப்பு ரயில்களை இயக்கியது ஏன்
இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது மக்களின் ஆதரவால்..
பீகார்,ஹரியானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக வெற்றி பெறுவது தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லுகளால்..
நல்லா முட்டி போட்டு கதறு கொத்தடிமை அதுசரி துண்டுசீட்டு கோமாளி எப்படி 40/40 வெற்றி பெற்றார்
அப்படி எத்தனை பேர் தேர்தல் தில்லுமுல்லுகளால் வாக்குரிமை இழந்திருக்கிறோம் என்று புகார் அளித்திருக்கின்றனர். தெளிவாக புள்ளி விவரங்களுடன் கொஞ்சம் கொடுக்கிறீர்களா. நொண்டிக்குதிரைக்கு சறுக்கியதுதான் சாக்கு. ஆக வரும் சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் திமுகவுக்கு ஆனது அல்ல..
இதனால எனக்கு இருக்கும் ஓரே நன்மை இன்னும் 5 வருஷத்துக்கு இங்கே கூலி வேலைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனக்கு ஒரு நாளைக்கு 5000 சம்பாதிச்சு கொடுக்கிறது என்கிட்ட வேலை செய்ற மூனு பீகாரிங்க தான்..
நீ என்ன தான் கூவுனாலும் இன்பநிதிக்கும் நீ சலூட் தான் அடிக்கணும்
நைனார் கேட்ட கேள்விக்கு பதில் எங்கே. முதலீடு ஏன் ஆந்திராவுக்கு போனது. அதற்குப் பதில் கேட்டால் ஆகாதவற்றையெல்லாம் கருத்து போடுவது. இதுதான் திகட்டலின் ஸ்டைலோ.
இஇப்படியே சும்மா மொக்கையா பேசிட்டு இருந்தால் யாரும் ரசிக்க மாட்டார்கள் ....பா ஜா கா தமிழ் நாட்டுற்கு தமிழ் மக்களுக்கு என்ன செய்தது ??. சொல்ல முடியுமா ??
முட்டுக்குடுங்கிறவிங்களுக்கு மூளை கிடையாதுங்குறது முழுசா நிரூபணம் ஆகிறது. திருட்டு தீயமுகவை ஓட ஓட விரட்டி அடிக்கணும். அதுதான் தலை போகிற விஷயம். நீ என்னா செய்தாய் என்பது கேள்வியா? வீடு பற்றி எரியும் போது பீடிக்கு நெருப்பு கேக்குற முட்டளுங்களையும் சேர்த்து விரட்டி அடிக்கணும். இது மாதிரி முழு முட்டாளுங்க இருக்குறதால சாராய யாவாரி 200 வெல்வோம்ன்னு பீத்திகிட்டு இருக்கு.
சரி ஒன்றிய அரசிடம் சொல்லி முதலீடுகள் மற்ற மாநிலம் போகாமல் பார்த்து கொள்ள லாமே , இப்படி செய்தால் நீங்கள் நோட்டாவை முந்த முடியும்
டாஸ்மாக் கொத்தடிமைகளுக்கு எதுக்கு முதலீடு
இப்படி பேசினால் மக்களுக்கு புரியாது . கண்டுகொள்ள மாட்டார்கள்.மேலும்
-
போட்டியிட்ட 98 சதவீதம் தொகுதிகளில் டெபாசிட் பறிபோனது: பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு ஷாக்
-
கலப்பட நெய் தயாரித்த ஆலைக்கு சீல் வைப்பு
-
'யுனிசெப்' இந்தியா அமைப்பின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்
-
வெனிசுலா மீது படையெடுக்க போகிறாரா டிரம்ப்; போர்க்கப்பல்கள் அணி வகுப்பதால் பதற்றம்
-
நாளை 7 மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; வானிலை மையம்
-
உலக வங்கி நிதி ரூ.14 ஆயிரம் கோடியை தவறாக பயன்படுத்தினர்; பிரசாந்த் கிஷோர் கட்சி புகார்