உலக வங்கி நிதி ரூ.14 ஆயிரம் கோடியை தவறாக பயன்படுத்தினர்; பிரசாந்த் கிஷோர் கட்சி புகார்
புதுடில்லி: பீஹார் தேர்தல் வெற்றிக்காக உலக வங்கியின் ரூ.14 ஆயிரம் கோடி நிதி தவறாக பயன்படுத்தப்பட்டது என ஜன் சுராஜ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
பீஹார் சட்டசபை தேர்தலில் ஆளும் தேஜ கூட்டணி அரசு ஆட்சியை தக்க வைத்துள்ளது. அதே நேரத்தில் தேர்தலில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த சூழலில், ''தேர்தலுக்கு முன்னதாக, பெண்களை தொழில்முனைவோர் ஆக்குவதற்காக வங்கி கணக்கில் ரூ.10,000 வரவு வைக்கப்பட்டது.
இதற்கு முதல்வர் நிதிஷ் குமார் உலக வங்கியின் ரூ.14 ஆயிரம் கோடி நிதியை பயன்படுத்தினார். இதன் மூலம் சமீபத்தில் முடிவடைந்த தேர்தல்களில் செல்வாக்கு செலுத்தப்பட்டது. இது பொது பணத்தை தவறாக பயன்படுத்தும் முயற்சியாகும். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும்'' என பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
கஜானா காலி
இது குறித்து, ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் தலைவர் உதய் சிங் கூறியதாவது: மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10 ஆயிரம் பணம், உலக வங்கியிலிருந்து வேறு சில திட்டங்களுக்காக வந்த ரூ.21,000 கோடியிலிருந்து வழங்கப்பட்டது. தேர்தலுக்கான முன்பாக, ரூ.14,000 கோடி எடுக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள 1.25 கோடி பெண்களுக்கு விநியோகிக்கப்பட்து.
பீஹாரின் பொதுக் கடன் தற்போது ரூ.4.06 லட்சம் கோடியாக உள்ளது. தினசரி வட்டி சுமை ரூ.63 கோடியாக இருக்கிறது. அரசு கஜானா காலியாக உள்ளது. பொதுப் பணத்தைப் பயன்படுத்தி, அவர்கள் மக்களின் ஓட்டுக்களை வாங்கினார்கள். உலக வங்கியிலிருந்து பெறப்பட்ட நிதி செலவிடப்பட்டு இருக்கிறது. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பொது நலனுக்காக செலவிட இப்போது பணம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
0 தொகுதிகள்
தேர்தல் வியூகவாதியாகவும் அரசியல்வாதியாகவும் மாறிய பிரசாந்த் கிஷோரால் நிறுவப்பட்ட புதிதாக உருவாக்கப்பட்ட ஜன் சுராஜ் கட்சி, பீஹார் சட்டசபை தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்து இருக்கிறது. 238 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது பேசும் பொருளாகி உள்ளது.
பொது பணம் பொதுமக்களுக்கு கொடுத்ததில் என்ன தவறு இருக்கிறது. தமிழகத்தில் தான் பொது பணத்தை பொதுமக்களுக்கு தராமல் கோபாலபுரத்து சொத்தாக வைத்துக்கொள்கிறார்கள்.
பெங்களூர்ல பெண்களுக்கு 24000 கொடுக்கிறாங்க, எங்க ஊர்ல 12000 குடுக்கிறாங்க , உங்களுக்கு 400 கோடி விடியல் குடுத்தாரு, இதெல்லாம் நீங்க குடுத்த ஐடியா இப்போ டெபாசிட் காலி பொங்கறீங்க
ஒரு யோக்கியன் சொன்னான் ....நான் இலவசமே மக்களுக்கு குடுக்க மாட்டேன்னு ...ஆனா இப்போ 10,000 ரூபாய் குடுத்து தேர்தல் ல ஜெய்ச்ருக்கான் ...
இது தேர்தலுக்கு முன்னாடி தெரியாம போச்சு இந்த ரெண்டு நாள் அவ்வளவு பெரிய காரியம் நடந்து இருக்கு இல்லாவிட்டால் இவர் தான் பீகார் முதல்வர்
அந்த பணம் மக்களுக்கு தான்சென்றுள்ளது திருட்டு திமுகவை போல் சுடாலின் குடும்பத்துக்கு போகவில்லை நீங்க தமிழக மக்களுக்கு செய்த அநீதிக்கு உமக்கு பீஹார் மக்கள் சரியான தண்டனை வழங்கியுள்ளனர்
இங்கே உள்ள ஆளுங்கட்சி 380 கோடி உங்களுக்கு மட்டுமே செலவு செய்து தான் ஆட்சியை பிடித்தது என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா??
இதை இவர் ஏன் தேர்தல் பிரச்சாரத்தின் போது சொல்லவில்லை?
எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்ட கேக்கும் கேசு நீ
உம் கட்சி தேறாதது தமிழக மக்களின் சாபம்
சார் உங்க அறிவுரைகளின் படி மே வங்கம், தீ மூ கா அனைவரும் இலவசத்தை அள்ளி விட்டனர். ஆட்சியில் அமர்ந்தனர். எல்லாரு அரசியல் தான் செய்வார்கள். இன்டி கூட்டணியினர் போல அனைத்து குடும்பத்தினறும் அரசு பதவியில் அமரலாம் என பொய் புரட்டு விடவில்லை...சும்மா கதராமல் அடுத்த தேர்தலுக்கு ஒழுங்கா உழைக்கவும். மக்களுடன் வீதியில் இறங்கி உழைக்கவும். வெற்றி உமதே...மேலும்
-
'யுனிசெப்' இந்தியா அமைப்பின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்
-
வெனிசுலா மீது படையெடுக்க போகிறாரா டிரம்ப்; போர்க்கப்பல்கள் அணி வகுப்பதால் பதற்றம்
-
நாளை 7 மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; வானிலை மையம்
-
முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு 124 ரன் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்ரிக்கா!
-
பக்கத்துக்குப் பக்கம் தகவல் பெட்டகம்