இந்தியர்களை வெறுக்கும் நியூயார்க் மேயர்; அதிபர் டிரம்பின் மகன் குற்றச்சாட்டு
வாஷிங்டன்: நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி இந்தியர்களை வெறுப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன் எரிக் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான நியூயார்க்கிற்கு அண்மையில் நடந்த மேயர் தேர்தலில், 34 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன்மூலம், நியூயார்க் நகரத்தின் அரசியல் வரலாற்றிலேயே முதல் இந்திய-அமெரிக்க முஸ்லிம் மேயர் என்ற வரலாற்றுச் சாதனையைப் பெற்றார்.
தேர்தலின் போது, அதிபர் டிரம்பின் கொள்கைகளையும், டிரம்பையும் ஜோஹ்ரான் மம்தானி கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில், நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி இந்தியர்கள் மற்றும் யூதர்களை வெறுப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன் எரிக் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது; நியூயார்க் நகருடன் போட்டியிடக் கூடிய அளவுக்கு, உலகில் வேறு எந்த நகரமும் இல்லை. ஆனால், இந்தியர்கள், யூதர்களை வெறுக்கும், இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒரு கம்யூனிஸ்ட் நபர் இங்குள்ளார். பாதுகாப்பான மற்றும சுத்தமான தெருக்கள், நியாயமான வரிகள் போன்றவற்றில் இங்கு தேர்வு செய்யப்பட்ட மேயர் கவனம் செலுத்தினால், அரசின் தலையீடு இல்லாமல் நியூயார்க் நகரம் செழிப்படையும், இவ்வாறு அவர் கூறினார்.
லண்டன் நகர மேயர் சாதிக் கான் போல ஹிந்துக்களுக்கு எதிராக கலவரத்தை தூண்ட வாய்ப்பு உள்ளது.
எந்த நாட்டிற்கு அகதியாக சென்று வாழ்ந்தாலும் அந்த நாட்டிற்கு விசுவாசமாக இருக்கமாட்டான்.
எந்த முஸ்லீம் நாட்டிலும் ஜனநாயகமே இல்லை. இருக்க விட மாட்டார்கள். அடிமைகளாக இருக்க சம்மதம் ஆனால் அமெரிக்காவின் நட்பைப் பெறலாம். காழ்ப்புணர்ச்சிகள் நிறைந்த அரசியல் நாடு அமெரிக்கா.
அவ்வளவுதான்
உள்ளூரிலேயே இந்தியாவை, இந்தியர்களை எதிர்ப்பவர்கள் வெளி நாட்டில் ,அமெரிக்காவில் மட்டும் இந்தியர்களை ஆதரித்து விடுவார்களா என்ன? இதில் நியூ யார்க் நகர மேயர் மட்டும் விதி விலக்காகவா இருக்கப் போகிறார்?
என்னமோ டிரம்ப் கூட்டத்துக்கு மட்டும் இந்தியர்களை ரொம்ப பிடிக்கும் என்கிற மாதிரி பேசுகிறாரே இவர்?
"அமெரிக்க முஸ்லிம் மேயர்". இவர் இந்தியர் இல்லை .
அம்மா மீரா நாயர் ..இந்து பெண்மணி …
அங்கே போனவுடன்??
அம்மா இந்திய பெண்மணி பஞ்சாபை சேர்ந்தவர்.மேலும்
-
ஆந்திராவில் இன்றும் என்கவுன்டர்: நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
-
பருவநிலை மாற்றத்தை தடுக்கும் செயல்பாடு; இந்தியாவுக்கு 10 இடங்கள் சரிவு
-
அரசு நில மோசடி வழக்கில் அஜித் பவாரின் மகனுக்கு தொடர்பில்லை; விசாரணை குழு அறிக்கை
-
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் எதிரொலி; வங்கதேசம் திரும்ப முயன்ற ஊடுருவல்காரர்கள் 300 பேர் கைது
-
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா; சிறப்பு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி
-
காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திகொலை; வாலிபர் கைது