'விஜய் பக்கம் போனால் வாய்ப்பு!'
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா பிறந்த நாள் விழாவை, சென்னை சாந்தோம் சர்ச் வளாகத்தில் சமீபத்தில் அக்கட்சியினர் கொண்டாடினர். தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சர்ச் பாதிரியார் அந்தோணிசாமி, கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்கினார்.
அப்போது, தமிழக காங்., கலைப் பிரிவின் மாநில நிர்வாகி, மயிலை அசோக்குமார், 'பாதர், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, வருங்கால கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக வேண்டும்; அதற்கும் சேர்த்து ஆசி வழங்குங்கள்' என்றார். உடனே பாதிரியாரும், செல்வப்பெருந்தகையின் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் வழங்கினார்.
இதை பார்த்த காங்., நிர்வாகி ஒருவர், 'தி.மு.க., கூட்டணியில் இருந்தால், எதுவும் கிடைக்காது... விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் போனால், வாய்ப்பிருக்கு...' என முணுமுணுக்க, சக நிர்வாகிகள் சத்தமின்றி சிரித்தனர்.
அதென்ன சர்ச்சில் பிறந்த நாள் விழா? கிறிஸ்தவர்கள் வாக்குகளை குறி வைத்தா? அல்லது விஜய்க்கு போகும் கிறிஸ்தவர்கள் வாக்குகளை குறி வைத்தா? எப்படியோ இம்முறை ஒரு தொகுதி கூட கிடைக்காது. கனவு காண்பதில் தவறில்லை. காணும் கனவை பிரதமராக வேண்டி காணுங்கள்.மேலும்
-
மீண்டும் கில், ஸ்ரேயாஸ் ஐயர்... நியூசி.,தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
-
பயணிகளின் வசதி, பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்; அஷ்வினி வைஷ்ணவ்
-
காலையில் சர்ர்... மாலையில் விர்ர்... தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு
-
வெனிசுலா மீதான அமெரிக்கப்படை தாக்குதலுக்கு ரஷ்யா, ஈரான் கண்டனம்
-
அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினர் சுற்றுப் பயணம்; இபிஎஸ் அறிவிப்பு
-
திமுக அரசு எப்போதும் உண்மையாக இருக்கும்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்