தி.மு.க., கூட்டணியில் காங்., இருக்காது: பொங்கல் விழாவில் பழனிசாமி உறுதி
மேட்டூர்: ''தி.மு.க., ஆட்சியில் மக்களுக்காக துரும்பை கூட கிள்ளி போடவில்லை,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சாடினார்.
சேலம் மாவட்டம், மேச்சேரி, காரப்பட்டி பள்ளத்தில், அ.தி.மு.க., சார்பில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. காலை 10:30 மணிக்கு, பழனிசாமி மாட்டு வண்டியில், நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்தார். பின், தயாராக வைக்கப்பட்டிருந்த பானைகளில், அரிசியை போட்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளை, பெண்கள், சிறுமியரின் வள்ளி கும்மி, கிராமிய நடனம், குதிரை நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, நடன கலைஞர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.
தொடர்ந்து பழனிசாமி பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு ஏராளமான சலுகைகள் கிடைத்தன. கூட்டுறவு வங்கிகளில், இருமுறை விவசாய கடன் ரத்து செய்யப்பட்டது. மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தை துவங்கினோம். அடுத்து வந்த, தி.மு.க., அரசு, அத்திட்டத்தை முடிக்கவில்லை. இதனால், விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர்.
மீண்டும், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். தி.மு.க., ஆட்சியில் மக்களுக்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
பின், பழனிசாமி அளித்த பேட்டி: அ.தி.மு.க., கூட்டணியில் வேறு சில கட்சிகளும் விரைவில் இணையும். யார் யாரெல்லாம் சேர்வர் என்பதை பகிரங்கமாக கூற முடியாது. 1965ல் நடந்த சம்பவம், 'பராசக்தி' படம். அப்போது, தி.மு.க.,- அ.தி.மு.க., கட்சிகள் கிடையாது. தமிழ் மொழிக்காக, நம் முன்னோர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். அதனால், அது குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.
மத்திய அரசு கொண்டு வந்த ஓய்வூதிய திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, தி.மு.க., அரசு தன்னுடைய திட்டம் போல அறிவித்துள்ளது; சில அரசு ஊழியர் சங்கங்கள் அதற்கு பாராட்டு தெரிவித்துள்ளன. ஆனால், பெரும்பாலான சங்கங்கள் எதிர்க்கின்றன. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பழைய ஓய்வூதிய திட்டம் கால சூழலைப் பொறுத்து நடைமுறைப்படுத்தப்படும்.
வரும் தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்., இருக்காது. தி.மு.க., தேர்தல் நேரத்தில், பல்வேறு வாக்குறுதிகளை கொடுக்கும். ஆட்சிக்கு வந்த பின், அதை நிறைவேற்றாமல் ஏமாற்றும். தற்போது அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், துாய்மை பணியாளர்கள் என, ஒவ்வொரு துறை ஊழியர் சங்கங்களும் கோரிக்கைகளை வலியுறுத்தி தினம் ஒரு போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரசின் பத்து சதவீத வாக்குகளை வைத்துதான் விடியலு கருநாநிதி காலத்திலிருந்து செயித்து கொண்டிருக்கிறது. அவர்கள் பிய்த்து கொண்டுபோனால் தீமுக கதி அதோகதிதான்
ஏன்? காங்கிரசையும் உங்க கூட்டணியில் சேத்துக்கப் போறீங்களா?
மொதல்ல உங்கள் கூட்டணியை கெட்டியாக வைத்துக்கொள்ளுங்கள்.
அமித்ஷாவை தெரியாமல் விளையாட பார்க்கும்
உங்கள் கூட்டணியை பற்றி மட்டும் நீங்கள் பேச வேண்டும்..தேர்தல் யுக்தி அறிந்து செயல்படுங்கள்.. தவெகவையும தேமுதிகவையும் உங்கள் கூட்டணிக்கு வர விடாமல் தடுக்கவே திமுக காங்கிரஸ் நாடகம் நடத்துகிறது.. கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் திமுகவை விட்டு காங்கிரஸ் விலகாது..முதலில் நீங்கள் உங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் வேலையை செய்யுங்கள்..
உங்கள் கூட்டணியில் அதிகாரப்பூர்வ ப.ம.கா இருக்காது
இது அவருக்கு மட்டும் இன்னும் புரியவில்லை! எடுத்துச் சொல்ல யாருக்கும் கட்சியில் தைரியம் இல்லை! கூட்டணி பலமிழந்து இருந்தும் தேர்தலில் நிற்பது கட்சிக்கு மூடுவிழா நடத்தும் வேலைதான்!
கூடிய விரைவில் இந்தி கூட்டணி புட்டு கொண்டு விடும் என்று செய்தி வருவது... தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கே நன்மை பயம் செயலாகவே அமையும் !!!மேலும்
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது
-
தை 2ம் தேதி பொங்கல் விழாவைக் கொண்டாடும் கிராம மக்கள்
-
வேலூர் சிஎம்சி மருத்துவமனை விடுதியில் அமலாக்கத்துறையினர் ரெய்டு
-
தவெக சார்பில் சட்டசபை தேர்தல் பிரசாரம்; குழு அமைத்தார் விஜய்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு