படாளம் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி துவக்கம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இந்த ஆண்டுக்கான கரும்பு அரவை பணி, நேற்று துவங்கப்பட்டது.

மதுராந்தகம் அடுத்த படாளத்தில், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்குகிறது.

இந்த ஆலையில் ஆண்டுதோறும் ஜனவரி யில், கரும்பு அரவை பணி துவங்கி, தொடர்ந்து ஆறு மாதங்கள் இயங்கும்.

அடுத்த ஆறு மாதங்கள் கரும்பு ஆலையில், பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

அதன்படி, இந்தாண்டுக்கான கரும்பு அரவை, நேற்று துவங்கியது.

படாளம் சர்க்கரை ஆலை செயலாட்சியர் குமரேஸ்வரி தலைமையில், கலெக்டர் சினேகா முன்னிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, அரவையை துவக்கி வைத்தார்.

இதில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், ஆலை மேலாளர் மீனா சுந்தரி மற்றும் மக்கள் பிரதிநிதிகள், கரும்பு விவசாயிகள், ஆலை தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து, அமைச்சர் கூறியதாவது:

கடந்த ஆண்டு, 70,000 டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. இந்த ஆண்டு, 3,200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர்.

இதன் மூலமாக, ஒரு லட்சம் டன் கரும்பு வரை அரைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement