குனியமுத்துார் கோட்டம் சார்பில் மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம்
போத்தனூர்: குனியமுத்தூர் கோட்டம் சார்பில் மின் சிக்கனம் வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம், கிருஷ்ணா கல்லூரி நுழைவாயில் முன் துவங்கியது.
மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். கோவைபுதூர் சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் முடிவடைந்த ஊர்வலத்தில், கல்லூரி மாணவர்கள், மின்வாரியத்தினர் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
செயற்பொறியாளர் (பொறுப்பு) சென்ராம், குனியமுத்தூர் உதவி செயற்பொறியாளர் அருள்குமார் உள்ளிட்டோர் பேசினர்.
* சீரநாயக்கன்பாளையம் கோட்டம் சார்பில், தொண்டாமுத்துார் அரசு கலைக்கல்லூரியில் ஊர்வலத்தை, வடக்கு மேற்பார்வை பொறியாளர் குணவர்த்தினி தலைமை வகித்து, கொடியசைத்து துவக்கி வைத்தார். தொண்டாமுத்தூர் பேருராட்சி தலைவர் கமலம், துணை தலைவர் நடராஜன், தாளியூர் பேரூராட்சி தலைவர் தண்டபாணி உள்ளிட்டோர், மின் சிக்கனம் குறித்து பேசினர்.
மாதம்பட்டி உதவி செயற்பொறியாளர் அனுசுயா, சீரநாயக்கன்பாளையம் உதவி செயற்பொறியாளர் சுப்ரமணி மற்றும் கோட்டத்திற்குட்பட்ட பொறியாளர்கள், பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி பெண்கள்உள்பட, 250 பேர் பங்கேற்றனர்.