அகற்றுவோம்!

மேற்கு வங்கத்தில் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டிய திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்த ஹுமாயூன் கபீரை வேண்டுமென்றே முதல்வர் மம்தா பானர்ஜி கைது செய்ய வில்லை. அயோத்தியில் அகற்றப்பட்டது போல், இங்கு பா.ஜ., ஆட்சிக்கு வரும்போது எந்த ஒரு படையெடுப்பாளர் பெயரிலும் மசூதி இருக்காது.

கிரிராஜ் சிங், மத்திய அமைச்சர், பா.ஜ.,

இதுவே போதும்!



கர்நாடகாவில் முதல்வர் விவகாரத்தில் பிரச்னை எதுவும் இல்லை. துணை முதல்வராக நீடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கட்சித் தொண்டராக
இருப்பதையே எப்போதும் விரும்புகிறேன். கட்சித் தலைமை
எப்போது, எந்த முடிவு எடுத்தாலும் அதை நான் ஏற்பேன்.

சிவகுமார், கர்நாடக துணை முதல்வர், காங்.,


சபரிமலையில் மத நிந்தனை!



சபரிமலை அய்யப்பன் கோவிலில் 4.5 கிலோ தங்கம் மட்டும் கொள்ளையடிக்கப்படவில்லை. கடந்த, 2015ம் ஆண்டில் காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியில், 'பதினெட்டாம் படி'யிலும் கொள்ளையடிக்கப்பட்டது. தங்கக் கொள்ளை என்பதையும் தாண்டி மத நிந்தனையும் செய்யப்பட்டுள்ளது.

ராஜிவ் சந்திரசேகர், கேரள மாநில தலைவர், பா.ஜ.,

Advertisement