மும்பை மாநகராட்சி தேர்தல்: தாக்கரே சகோதரர்கள் கூட்டணி

மும்பை: மஹாராஷ்டிராவில், மும்பை உட்பட, 29 மாநகராட்சிகளுக்கு நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் இணைந்து போட்டியிட உள்ளதாக, உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோர் அறிவித்துள்ளனர்.


மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 246 நகராட்சிகள், 42 நகர பஞ்சாயத்துகள் என, மொத்தமுள்ள, 288 உள்ளாட்சி அமைப்புகளுக்கு சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது.


இதில், 220க்கும் அதிகமான உள்ளாட்சி அமைப்புகளை ஆளும் மஹாயுதி கூட்டணி கைப்பற்றியது. எதிர்க்கட்சியான காங்., - உத்தவ் தாக்கரேயின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, 'மஹா விகாஸ் அகாடி' 50க்கும் குறைவான உள்ளாட்சி அமைப்புகளையே கைப்பற்றியது.


இதைத் தொடர்ந்து , ஆசியாவிலேயே பணக்கார மாநகராட்சியான மும்பை உட்பட, மஹாராஷ்டிராவில் உள்ள, 29 மாநகராட்சிகளுக்கு ஜன., 15ல் தேர்தல் நடக்கிறது; 16ல் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.


மாநகராட்சி தேர்தல் தொடர்பாக, மும்பையில் நேற்று, முன்னாள் முதல்வரும், உத்தவ் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, அவரது சகோதரரும், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவருமான ராஜ் தாக்கரே ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.


உத்தவ் தாக்கரே கூறுகையில், ''மும்பை மாநகராட்சி தேர்தலில், ராஜ் தாக்கரே உடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம். நாங்கள் ஒன்றாக இருக்கவே இணைந்து உள்ளோம்.

''மும்பை மட்டுமின்றி, மற்ற மாநகராட்சிகளிலும் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சு நடக்கிறது. நாசிக் மாநகராட்சிக்கான தொகுதி பங்கீடு இறுதியாகி விட்டது. பா.ஜ.,வை பிடிக்காதவர்கள், எங்கள் கூட்டணிக்கு வரலாம்,'' என்றார்.


ராஜ் தாக்கரே கூறுகையில், ''மராத்தியர் ஒருவருக்கே மும்பை மேயர் பதவி கிடைக்கும். அவர் நிச்சயமாக எங்கள் கூட்டணியைச் சேர்ந்தவராக இருப்பார்,'' என்றார்.


மும்பை மாநகராட்சியில், மொத்தம் 227 வார்டுகள் உள்ள நிலையில், தொகுதி பங்கீடு குறித்த விபரங்களை தாக்கரே சகோதரர்கள் வெளியிடவில்லை.


@quote@

அரசியல் வாரிசுகள்!


தோல்விக்கு பயந்து அரசியல் வாரிசுகளான உத்தவ் - ராஜ் ஒன்றிணைந்து உள்ளனர். இதனால் எந்த பயனுமில்லை. மும்பை மாநகராட்சி தேர்தலில், தங்களது டிபாசிட்டை காப்பாற்றவே அவர்கள் கூட்டணி வைத்துள்ளனர். என்ன நடந்தாலும், தே.ஜ., கூட்டணி வெல்வது உறுதி.

- பிரதீப் பண்டாரி, செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,quote

@block_B@

இணைந்த கைகள்!

சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் மகன் உத்தவ். பால் தாக்கரேயின் இளைய சகோதரர் ஸ்ரீகாந்த் தா க்கரேயின் மகன் தான் ராஜ் தாக்கரே. சிவசேனாவில் உத்தவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாகக் கூறி, அதிலிருந்து விலகி, 2006ல், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை ராஜ் தாக் கரே துவக்கினார். கடந்த, 2009 சட்டசபை தேர்தலில், அவரது கட்சி, 13 தொகுதிகளை வென்றது. ஆனால், அதன்பின் நடந்த தேர்தல்களில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கடந்த 20 ஆண்டு களாக எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்த உத்தவ் - ராஜ் ஆகியோர், மஹாராஷ்டிர அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக, ஜூலையில், முதன்முதலில் ஒன்று சேர்ந்த னர். தற்போது, மாநகராட்சி தேர்தலையும் இணைந்து சந்திக்க உள்ளனர்.block_B

Advertisement