இந்தியா-எகிப்து விமான படை ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்திய தளபதி எகிப்திற்கு பயணம்
புதுடில்லி: இந்தியா எகிப்து நாடுகளின் விமானப்படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் எகிப்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து இந்திய விமானப்படை தனது எக்ஸ் சமூக வலை தளத்தில் பதிவில் தெரிவித்து இருப்பதாவது: எகிப்து நாட்டின் விமானப்படை தளபதி ஏவிஎம் அமர் அப்தெல் ரஹ்மான் சகர் அழைப்பின் பேரில் இந்திய விமானபடை தளபதி ஏர் சீப் மார்ஷல் ஏ.பி.சிங் எகிப்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதல் நாளில் எகிப்தில் உள்ள பெரிஹாட் விமானதளத்திற்கு சென்றார்.தொடர்ந்து ஹெலியோபோலிஸ் போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.மேலும் இந்திய விமானப்படைத் தளபதிக்கு எகிப்திய விமானப்படை செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இரண்டாம் நாளில் இருநாடுகளின் விமானப்படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து ஏ.பி.சிங்., கெய்ரோவில் உள்ள இந்தியா ஹவுசில் எகிப்துக்கான இந்திய தூதர்சுரேஷ் கே ரெட்டியை சந்தித்து பேசினார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
இளைஞரணியில் இருந்து 40 வேட்பாளர்கள்: வீட்டில் விருந்தளித்து தேர்வு செய்த உதயநிதி
-
‛'சிக்கந்தர் மலையை' தகர்க்க முடியாது': மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் ஆத்திரம்
-
24 ஆண்டாக தொடர்ந்து பயணிக்கும் டில்லிமெட்ரோவின் முதல் ரயில்
-
டெக்னிக்கல் அனாலிசிஸ்: 25,900-க்கு கீழே போனால் இறக்கம் வரக்கூடும்
-
மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு 10 ஆண்டில் ரூ.300 லட்சம் கோடியாக உயரும்: இக்ரா ஆய்வறிக்கையில் தகவல்
-
போரக்ஸ்: நிலைபெற்று வரும் ரூபாய் மதிப்பு