மாவட்டத்தில் மார்கழி மாத கார்த்திகை சிறப்பு வழிபாடு
பழநி: கார்த்திகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு, அலங்காரம் நடந்தது.
பழநி முருகன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை, ஆறு கால பூஜையில் நடைபெற்றது. உள்ளூர்,வெளியூர், வெளி மாநில பக்தர்கள் படிப்பாதை, வின்ச் மூலம் கோயில் சென்றனர்.
பக்தர்களின் வருகை அதிகளவில் இருந்ததால் குடமுழுக்கு மண்டபம் வழியாக மலைக்கோயில் செல்ல படிப்பாதையில் அனுமதிக்கப் பட்டனர்.
3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். மாலையில் விளக்கு பூஜை திருக்கல்யாண மண்டபத்தில் நடந்தது. சாயரட்சை பூஜைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு நடந்தது. வெளி பிரகாரத்தில் தங்கரத புறப்பாட்டில் சின்னகுமாரசுவாமி எழுந்தருளினர். திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்:: கார்த்திகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள வள்ளி-தெய்வானை, சண்முகர் சன்னதியில் சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம் உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
அதேபோல் திண்டுக்கல் ஆர்.வி.நகர் கந்தகோட்டம் முருகன், என்.ஜி.ஓ. காலனி முருகன், ஒய்.எம்.ஆர்., பட்டி முருகன் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சின்னாளபட்டி: சதுர்முக முருகன் கோயிலில் மூலவர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், சதுர்முக முருகனுக்கு, சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. சிவசுப்பிரமணியருக்கு, வெள்ளி கவசம், ராஜ அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
ரெட்டியார்சத்திரம்: கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி, காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில், விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
மேலும்
-
அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு; ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன்
-
சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சை; 22 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கோரிய ஆக்ஸ்போர்டு பல்கலை
-
ஏஐ துறையில் நம்பமுடியாத சாதனை; வந்தே பாரத் ரயிலில் 16 வயது சிறுவனுக்கு சசி தரூர் பாராட்டு
-
திருப்பூர் குமரன் குன்று கோவிலை அகற்ற முயற்சி; எதிர்த்து போராடிய இந்து முன்னணியினர் 200 பேர் கைது
-
வெனிசுலா மக்களின் பாதுகாப்பு முக்கியம் ; ஜெய்சங்கர்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரிப்பு