நவீன ஜல்லிக்கட்டு போட்டி
திருச்செங்கோடு: பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை அலங்காநல்லுாரிலும், தமிழகத்தின் மற்ற கிராம பகுதிகளிலும், ஜல்லிக்கட்டு போட்டி இளைஞர்க-ளுக்காக நடத்தப்படுகிறது. ஆனால், திருச்செங்-கோடு நந்தவன தெருவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என, புதுமையான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.
அதில், பெண்கள், துணியால் தங்களின் கண்-களை கட்டியபடி, கயிற்றின் ஒரு பகுதியை தங்கள் காலிலும், மற்றொரு பகுதியை கோழியின் காலிலும் கட்டிவிடுகின்றனர். பின், ஒரு வட்டத்திற்குள் நிற்க வைத்து, ஒரு நிமிட நேரத்திற்குள் கோழியை பிடிக்கவேண்டும் என்-பதே போட்டி. இதில், ஏராளமான பெண்களும், குழந்தைகளும் ஆர்வத்துடன் பங்கேற்று, கோழியை பிடிக்க முயன்றனர். இதை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement