மாட்டுப்பொங்கல் கோலாகலம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், மாட்டுப்பொங்கல் விழாவை, விவசாயிகள், பொதுமக்கள் உற்சாக-மாக கொண்டாடினர்.
விவசாயிகள் அதிகம் நிறைந்த நாமக்கல் மாவட்டத்தில், பொங்கல் பண்டிகை இந்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மார்-கழி கடைசி நாளான, கடந்த, 14ல், போகி பண்-டிகை கொண்டாடப்பட்டது. அதையொட்டி 'பழை-யன கழிதலும், புதியன புகுதலும்' என்ற பழமொ-ழிக்கேற்ப, பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வயல்களில் சுத்தம் செய்து, காப்புக்கட்டி கொண்-டாடினர்.
தை, 1ம் நாளான, நேற்று முன்தினம், பொங்கல் பண்டிகை வீட்டு பொங்கலாக கொண்டாடப்பட்-டது. ஆடி மாதத்தில் பயிரிட்ட பயிர்கள், நல்ல விளைச்சளை தை மாதம் தரும். இதில் அறுவடை செய்த நெல்லின் அரிசியை கொண்டு பால், சர்க்-கரை, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் சேர்த்து புதுப்பானை, புது அடுப்பில் பொங்கல் வைத்து, சூரியபகவானை வழிபட்டனர். தொடர்ந்து, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் வழங்கி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
நேற்று, மாட்டுப்பொங்கல், உழவர் திருநாளாக கொண்டாடப்பட்டது. அதில், விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்த மாடுகளை குளிப்பாட்டி, பொட்டு வைத்து, கழுத்துக்கு மணி, கொம்புக-ளுக்கு வர்ணம், புது கயிறு கட்டி அலங்கரித்தனர். தொடர்ந்து, மாட்டு கொட்டகை அருகே, கரும்பு உள்ளிட்ட வண்ண தோரணங்கள் கட்டி, பொங்கல் வைத்து படையலிட்டு மாடுகளுக்கு ஊட்டினர். பின், ஊர் மாரியம்மன் கோவிலுக்கு மாடுகளை அழைத்து வந்து தீர்த்தம் தெளித்த பின், மாடுக-ளுக்கு கற்பூரம் காட்டி வழிபட்டனர். இன்று, காணும் பொங்கல் விழா மற்றும் கரிநாள் கொண்-டாடப்படுகிறது.
அதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் குறிப்-பாக காவிரிக்கரையோரம் வசிக்கும் பொதுக்கள், தங்களின் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் ஆற்றங்கரைகளுக்கு சென்று கூடிப்பேசி, சிற்-றுண்டிகளை பகிர்ந்து உண்டு, விளையாடி மகிழ்-வது வழக்கம். இதற்காக, நாமக்கல் மாவட்-டத்தில், மோகனுார், ப.வேலுார், ஜேடர்பா-ளையம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும்
-
காசி தமிழ்ச்சங்கமத்தில் கலந்து கொண்ட தமிழக இளைஞருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சிறுதானியத்தில் செய்யலாம் அத்தோ நுாடுல்ஸ், மோமோஸ்
-
இதை ஏற்றுக்கொள்ள முடியாது: டிரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ், பிரிட்டன் எதிர்ப்பு
-
ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது; சொல்கிறார் டிரம்ப்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்
-
கறிக்கோழி தொழிலுக்கு சிக்கல் உற்பத்தியாளர்கள் குமுறல்