விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல்: 'விசைத்தறிகளை நவீன மயமாக்கும் திட்-டத்தில், இயந்திரங்கள் சப்ளை செய்வோர் பட்டி-யலில் சேர்வதற்கு, வரும், 23 வரை விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

விசைத்தறி தொழிலில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட பழைய சாதாரண விசைத்தறிகளை, நாடா இல்-லாத ரேபியர் தறிகளாக தரம் உயர்த்துவதற்காக, குறைந்த வேகமுள்ள பழைய தறிகளை மாற்றி அதிக வேகமுள்ள புதிய ரேப்பியர் தறிகளை கொள்முதல் செய்யவும், புதிய ரேப்பியர் தறிகள் கொள்முதல் செய்யவும், அரசு மூலம் மூலதன மானியம் வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம், மூன்-றாண்டுகள் பழமையான சாதாரண விசைத்தறி-களை, கம்ப்ளீட் ரேப்பியர் கிட், எலக்ட்ரானிக் கலர் செலக்டர், வெப்ட் அக்யுமலேட்டர், கியர் பாக்ஸ், பேனல் போர்டு, டக் இண்டிவைஸ் ஆகிய உபகர-ணங்களை பொருத்தி ரேப்பியர் தறிகளாக மாற்-றிக்கொள்ளலாம்.


இத்திட்டத்தின் கீழ், சப்ளையர்கள் பட்டியலில் சேர்ந்துகொள்ள வரும், 23 வரை விண்ணப்பிக்-கலாம். விபரங்களுக்கு, குமாரபாளையம் தாலுகா, ஈகாட்டூர், எலந்தகுட்டையில் செயல்பட்டு வரும், திருச்செங்கோடு சரக கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement