பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது  

சிவகங்கை: பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டத்தில் தலா 50 ஆயிரம் பேருக்கு மேல் அடிப்படை எழுத்தறிவு வழங்கிய சி.இ.ஓ.,க்களுக்கு சிறந்த கற்போர் மைய விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி திட்டத்தின் கீழ் கிராமங்களில் தன்னார்வலர்கள் மூலம் எழுத படிக்க தெரியாதவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை தமிழ் எழுத, படிக்கவும், அடிப்படை கணிதமும் கற்பிக்கப்படுகின்றன.

தமிழக அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிய மாவட்டங்களை தேர்வு செய்து, அம்மாவட்டங்களுக்கு சிறந்த கற்போர் மைய விருது வழங்கப்படும் என கல்வித்துறை அறிவித்தது. இலக்கை அடைந்த 12 மாவட்டங்களுக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது. ஜன., 20 ம் தேதி நடைபெற உள்ள விழாவில் முதன்மை கல்வி அலுவலர்கள் சென்னை எம்.கபீர், கடலுார் ஏ.ரமேஷ், தர்மபுரி ஜே.ஜோதிசந்திரா, ஈரோடு இ.மான்விழி, கள்ளக்குறிச்சி கா.கார்த்திகா, கிருஷ்ணகிரி ஆர்.மதன்குமார், சேலம் பி.மகேஸ்வரி, தஞ்சாவூர் வி.பேபி, திருவண்ணாமலை ஏ.முனிராஜ், திருச்சி கே.கிருஷ்ணப்பிரியா, திருவள்ளூர் எஸ்.கற்பகம், விழுப்புரம் ஆர். அறிவழகன் ஆகியோர் விருது பெற உள்ளனர்.

Advertisement