வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
பெரியகுளம்: பெரியகுளத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் போலி தங்க நகைளை அடகு வைத்து ரூ.17 லட்சம் கடன் பெற்று ஏமாற்றிய திண்டுக்கல் மாவட்டம் சரவணக்குமார் 30, ஆனந்தகுரு 30, வங்கி நகை மதிப்பீட்டாளர் விக்னேஷ் 29, ஆகியோரை தென்கரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி உள்ளது. வங்கியில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருணாச்சலபுரம் சரவணக்குமார். இவரது நண்பர் தாடிக்கொம்பு ஆனந்தகுரு இணைந்து 30 பவுன் நகைகள் அடகு வைத்து ரூ. 17 லட்சம் கடன் பெற்றனர். கடன் தேதி முடிந்தும் நகைகளை திருப்பவில்லை.
சந்தேகம் அடைந்து நகைகளை வங்கி மேலாளர் விவேக் தலைமையில் சோதனை செய்தனர். நகைகள் போலி என தெரிந்தது. விவேக் போலீசில் புகார் அளித்தார். சரவணக்குமார், ஆனந்தகுருவை போலீசார் கைது செய்தனர்.
வங்கியில் நகை மதிப்பீட்டாளர் பெரியகுளம் வடக்கு அக்ரஹாரம் விக்னேஷ் துாண்டுதலின்படி போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றது தெரிந்தது. விக்னேஷையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும்
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி
-
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர் மஹா. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது