67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

வேடசந்துார்: தமிழகத்தில் வேலைக்காக 67 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கும் நிலையில் 30 சதவீதம் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழகத்தில் கல்வித் தரம் உயர்ந்து வருகிறது. ஆனால் படித்து முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு சரிவர கிடைப்பதில்லை. தமிழகத்தில் 67 லட்சம் பேர் படித்து முடித்துவிட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அரசு பணிகளில் 30 சதவீதம் காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும், இவற்றை விரைந்து நிரப்ப வேண்டும் என ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

வருவாய்த்துறை, கல்வித்துறை, உள்ளாட்சித் துறை, சத்துணவு, பால்வாடி, அங்கன்வாடி என அனைத்து துறைகளிலும் காலிப் பணியிடங்கள் அதிகம் உள்ளன. ஒருவரே இரண்டு மூன்று பேரின் பணிகளை பார்த்து வருகின்றனர்.

ஓய்வு வயது 60ஆக உயர்த்தியதால் பல இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டது. எனவே படித்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

முதற்கட்டமாக காலியாக உள்ள 30 சதவீதம் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement