பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ரோப்கார், வின்சில் கோயிலுக்கு செல்ல பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. பொது, கட்டண தரிசன வரிசையில் வெளிப்பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் காத்திருந்தனர். 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கிரிவீதியில் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருஆவினன்குடி, அருள்ஜோதி வீதி, இடும்பன் இட்டேரி ரோடு பகுதிகளில் பாதைகளில் ஆக்கிரமிப்பு கடைகள் இருந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

Advertisement