கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர் மஹா. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!
மும்பை: பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் மஹாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக களம் இறங்கி வெற்றி பெற்றுள்ளார்.
மஹாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. 30 ஆண்டு கால தாக்கேரயின் ஆதிக்கத்தை உடைத்துத் தள்ளி மஹாயுதி கூட்டணி அமோக இடங்களை வென்றிருக்கிறது.
தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், அதில் சில ஆச்சரியப்படும் சம்பவங்களும் பதிவாகி இருக்கின்றன. குறிப்பாக, பெரும் பரபரப்பாக பேசப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் இந்த உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார்.
அவரின் பெயர் ஸ்ரீகாந்த் பங்கர்கர். ஜல்னா நகராட்சித் தேர்தலில் 13வது வார்டு கவுன்சிலராக வென்றுள்ளார். தேர்தலில் இவர் 2621 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா இந்த வார்டில் வேட்பாளரை நிறுத்தவில்லை.
கவுரி லங்கேஷ் வழக்கின் குற்றவியல் விசாரணை இன்னமும் நிலுவையில் உள்ள போதே ஸ்ரீகாந்த் பங்கர்கர் தேர்தலில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்று இருக்கிறார். இந்த வெற்றியை அவர், தமது ஆதரவாளர்களுடன் கொண்டாடினார். இது குறித்து அவர் கூறுகையில், தம்மீதான வழக்கு விசாரணை நடந்து வருகிறது, எந்த தண்டனையும் விதிக்கப்படவில்லை என்றார்.
கவுரி லங்கேஷ் வழக்கின் பின்னணி
2017ம் ஆண்டு செப்.5ம் தேதி பெங்களூருவில் உள்ள தமது வீட்டில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று கொலை சம்பவம் குறித்து பெரியளவில் பேசப்பட்டது. எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன. வழக்கில் அடுத்தடுத்து நடைபெற்ற விசாரணைகளின் போது, ஸ்ரீகாந்த் பங்கர்கர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். 2024ம் ஆண்டு செப்.4ம் தேதி கர்நாடகா ஐகோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியது. 2001ம் ஆண்டு ஜல்னா நகராட்சி தேர்தலில் சிவசேனா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
நீதிமன்றங்களின் செயல்பாடு மிகவும் வருத்தமளிக்கிறது.
200 கேஸ் ஒருத்தர்கூட கருத்து எழுதலமேலும்
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
-
தை மாத பிரதோஷத்தையொட்டி ஏகாம்பர ஈஸ்வரருக்கு சிறப்பு பூஜை