வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்

11

நமது நிருபர்

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான வன்முறையில், சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கும், நியாயமான தேர்தலையும் நடத்தவும் முகமது யூனுஸின் ஆட்சி உறுதியளிக்க வேண்டும் என பிரிட்டன் பார்லியில் அந்நாட்டு எம்பி வலியுறுத்தி உள்ளார்.


பிரிட்டன் பார்லிமென்டில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான கன்சர்வேடிவ் கட்சி எம்பி பாப்பிளாக்மேன் பேசியதாவது: பிப்ரவரி 12ம் தேதி திட்டமிடப்பட்ட தேர்தல்கள் நடத்தப்பட உள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருப்பது குறித்து ஜனநாயக கவலைகள் உள்ளன. ஹிந்து ஆண்கள் தெருக்களில் கொல்லப்படுகிறார்கள்; அவர்களின் வீடுகள் எரிக்கப்படுகின்றன; கோவில்கள் எரிக்கப்படுகின்றன; மற்ற மத சிறுபான்மையினரும் இதே துயரத்தை அனுபவிக்கிறார்கள்.


இதனை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். சிறுபான்மையினரைப் பாதுகாக்கவும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்யவும் அரசு செயல்பட வேண்டும்.
ஹிந்துக்கள் மீதான வன்முறையில், சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கு
நடவடிக்கை எடுப்பதை முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு உறுதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள் குறித்து இந்தியா ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதும், அவர்களின் வீடுகள் மீதும் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை நாம் தொடர்ந்து கண்கூடாகக் காண்கிறோம். இதுபோன்ற வகுப்புவாத சம்பவங்கள் விரைவாகவும் உறுதியாகவும் கையாளப்பட வேண்டும். தடுக்கப்பட வேண்டும்" என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement