கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு

சூளகிரி: கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் சூளகிரியில் இன்று (2ம் தேதி) நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை வகிக்கிறார். 'திராவிட பொங்கல்', 'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' உள்ளிட்ட பணிகள் குறித்து, விவாதிக்கப்பட உள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ., க்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நடக்கும் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து, தி.மு.க., நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement